Subscribe Us

புலம்புகின்றனர் கொஸ்கம மக்கள் ; வீடுகளில் திருட்டு


கொஸ்கம, சாலாவ இராணுவ ஆயுதக் களஞ்சியசாலையின் வெடிப்பு சம்பவத்தையடுத்து குறித்த பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் வீடுகள் உடைக்கப்பட்டு வீட்டிலுள்ள பொருட்கள் திருடப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். 


கொஸ்கம, சாலாவ பிரதேசத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் இது தொடர்பில் தெரிவிக்கையில், 

வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதும் இருக்க ஒரு இடமுமின்றி அவசரஅவசரமாக வெளியேற்றப்பட்டோம். இப்பொழுது வீட்டிற்கு வரவேண்டாம் என்று கூறுகின்றனர். வீட்டில் உள்ள பொருட்கள் திருட்டுப் போகின்றன. நாம் இப்பொழுது என்ன செய்வதென்று அறியாமல் நிர்க்கதியாக நிற்கின்றோம்.

பெண்ணொருவர் கூறுகையில்,



'எனது வீட்டில் கதவு, ஜன்னல்கள் இல்லாத காரணத்தால் எனது தாயின் வீட்டில் என்னுடைய வீட்டுப்பொருட்களை வைத்திருந்தேன். திருடர்கள் எனது தாயின் வீட்டினை உடைத்து பொருட்களை திருடிச் சென்றுள்ளனர் என கண்ணீரோடு தனது குறைகளை வெளிப்டுத்தினார்.



ஆயுதக் களஞ்சிய வெடிப்பு சம்பவத்தினால் வெளியேற்றப்பட்ட மக்கள் பெப்பிலிவெல புர்வாராமய, கொஸ்கம பொலவத்த விகாரை, அவிசாவளை, புவக்பிட்டிய விகாரை, கொஸ்கம அகரவிட ஆரம்பப் பாடசாலை மற்றும் அவிசாவளை சுமன பிரிவெனா போன்ற இடங்களில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments