பிச்சை எடுப்பதற்காக தனது பேரனை கடத்தி சென்ற சம்பவம் தொடர்பில் நபரொருவர், அநுராதபுரம் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொசன் காலத்தில் பிச்சை எடுப்பதற்காக பிள்ளையை பெற்று தருமாறு சந்தேக நபர் கடந்த சில நாட்களாக தனது மகனிடம் கோரியுள்ளார்.
எனினும் தந்தையின் கோரிக்கையை அவர் நிராகரித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பின்னர் வீட்டில் எவரும் இல்லாத சந்தர்ப்பத்தில் சந்தேக நபர், தனது பேரனை பிச்சை எடுப்பதற்காக கடத்தி சென்றுள்ளார்.
இது தொடர்பாக பெற்றோர் காவற்துறையிடம் முறையிட்டமைக்கு அமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த சிறுவனும் மீட்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.










0 Comments