Subscribe Us

மொஹமட் நிஷோஸின் ( தயிர் ) கவிதை தொகுப்பு.


Mohamed Nizous

தயிர் சஹரில் கரைக்கப்படலாம் சிலருக்கு 
தயிர் உயிரிலும் ஓம்பப் படும் 

எத் தயிர் யார் யார் கடை வாங்கினும் அத்  தயிர்
எக்ஸ்பெயர்ட் டேட் பார்த்தல் அறிவு 

தயிர் உண்டு நோன்பு பிடிப்பாரே பிடிப்பார் மற்றோரெல்லாம் 
வயிறு காய்ந்து வாடி நிற்பார் 

பழைய தயிர் குடித்தாரே ஒருவர் அவர் பள்ளி வோஷ் ரூமில் 
நுழையும் வழி கேட்டு ஓடுவார் 

சட்டியில் மிஞ்சிய தயிரை பத்திரமாய் குளிர் சாதனப் 
பெட்டியில் வைப்பார் பெரியார் 

யாகாவாராயினும் தயிர் குடிக்க குடிக்காக்கால் 
சோகாப்பர் சொட்டு வெயில் ஏற 

கரண்டியால் வழித்து கையால் வழித்து காணா என்று 
சுரண்டியும் உண்பார் சுவையான தயிரை 

பொரியலில் தொடங்கி பொறுக்கும் வரை உண்டு தயிருக்
கரையலில் முடிப்பதாம் ஸஹர் 

Post a Comment

0 Comments