Subscribe Us

சீதனம் எனும் சீர்கேட்டால் சமூகம் சந்தித்து வரும் கலாச்சார சீரழிவுகளும், துன்பங்களும்


சீதனம் எனும் சீர்கேட்டால் சமூகம் சந்தித்து வரும் கலாச்சார சீரழிவுகளும், துன்பங்களும் ஏராம் எனலாம். வெளிப்படையாகவும், மூத்தவர்களது அங்கீகாரத்துடனும் நடக்கும் பகல் கொள்ளையாக‪#‎சீதனத்தை‬ குறிப்பிடலாம்.

கரும்பு தின்ன வாங்கும் கைக்கூலியாகவும், ஆண்மையற்ற ஆண்மகன் வாங்கும் பிச்சையாகவும் சீதனத்தை குறிப்பிடலாம்.

சீதனத் தட்டை பரிமாறும்போது "அல் பாத்திஆ" ஓதி ஆமோதித்து வழர்த்த ஹஸரத்துகளுக்கு முன்னால்! சீதனத்தின் சுயரூபத்தை படம்பிடித்துக் காட்டியுள்ள மவ்லவியை பாராட்டித்தான் ஆக வேண்டும்.

சீதனத்தை ஒழிக்க இலகுவழி
======================


இயங்கங்களுக்கு அப்பால், கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால், அழிக்கப்பட வேண்டிய ஓர் பொதுவிடயமாக! அனைவராலும் இனங்கானப்பட்டுள்ள சீதனத்தை ஒழிக்க இலகுவான வழியையும், பொறுப்பையும், அதிகாரத்தையும் பள்ளிப்பரிபாளன சபைகளிடம் அல்லாஹ் வைத்திருக்கிறான் என்றால்! அது மிகையாகாது.

அனேகமான ஊர்களில் திருமண நிகழ்வுகள் பள்ளிப்பரிபாளன சபையை சார்ந்தே நடைமுறையில் உள்ளன. திருமண நிகழ்வுகளுக்கான விதிகளையும் அமைத்து பரிபாளன சபைகள் இயங்குகின்றமை குறிப்பிடத் தக்கது.

விதிகள் எவ்வாறு இருந்தாலும் அவற்றை கடைபிடித்து, மகிழ்ச்சிகரமாக தமது திருமண நிகழ்வுகளை நடாத்திக் கொள்ளவே ஒவ்வோர் குடும்பமும் விறும்புகின்றனர்.

இந்நிலையில்!

> சமூகத்தின் நன்மை கருதியும்,

> ஏழை குமரிகளின் நல்வாழ்வு கருதியும்,

> கலாச்சார சீரழிவுகளில் இருந்து இச்சமூகத்தை பாதுகாக்குமுகமாகவும் .....


"‪#‎சீதனம்‬ எடுக்கும் திறுமண நிகழ்வுகளில்! பள்ளிப்பரிபாளன சபையோ, பள்ளிவாயல் கதீப் அவர்களோ கலந்து கொள்ள மாட்டார்கள்" எனும் சட்ட விதியை உள்ளடக்கி, பரிபாளன சபைகளால் நடைமுறைப் படுத்தப் பட்டால்! 
சீதனம் எனும் சீர்கேடு, சூறாவளிக்காற்றில் சிக்கிய சருகாக பறந்து விடும்.

இதனால்!...

> வாழ்வின்றி தவிக்கும் ஏழைக் குமரிகளுக்கு வாழ்வு கிட்டும்.

> கடனாளிகளாக மாறிவரும் எத்தனையோ தந்தைகளுக்கு மோட்சம் கிட்டும்.
> தன் சகோதரிகளை கரைசேர்க்க பாலைவனத்தில் கிழவனாகிக் கொண்டிருக்கும் எத்தனையோ சகோதரர்களது வாழ்க்கை அர்த்தமாகும்.

> காதலும், கள்ளத் தொடர்புகளும் பெருமளவு குறையும்.

> இனவாதிகளால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு வரும் "துவேஷ காதல்" முடிவுக்கு வரும்.

> இன்னும் பல.......


அத்துடன்......

அறியாத் தனமாக சீதனத்தைப் பாவமாக கருதாமல் சீதனம் எடுத்த அப்பாவிகள் பலர் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 

> இப்பாவத்திலிருந்து அவர்களுக்கு விடுதலை கிடைக்கவும்,

> இனிவரும் காலங்களில் சீதனம் எடுக்க நாடுவோர்க்கு படிப்பினையாகவும்

‪#‎ஏலவே‬ சீதனம் பெற்றவர்கள் தமது சீதனத்தை திருப்பி ஒப்படைக்கும் நிகழ்வொன்றை பள்ளிபரிபாளன சபைகள் செய்ய வேண்டும்.

இந்நிகழ்வானது! பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் ஒரு நிகழ்வாக மட்டுமல்லாது, சீரிய சிந்தனைப் புரட்சியொன்றை இச்சமூகத்தில் மலரச் செய்ய பசளையாகவும் இன்ஷா அல்லாஹ் நிச்சயமாக அமையும்.

இப்படி ஏராளமான நன்மைகளை பெற்றுத் தரக்கூடிய நன்நிலையை உருவாக்க, பள்ளிப் பரிபாளன சபையால் நடைமுறைப் படுத்தப்பட வேண்டிய மிக இலகுவான சட்டமே! 

"#சீதனம் எடுக்கும் திறுமண நிகழ்வுகளில்! பள்ளிப்பரிபாளன சபையோ, பள்ளிவாயல் கதீப் அவர்களோ கலந்து கொள்ள மாட்டார்கள்" என்பதாகும்.


சந்தாவரி பாக்கி இருப்பவர்களுக்கு கடிதம் தரமாட்டோம், மவ்லவியை அனுப்ப மாட்டோம் என்ற சட்டங்களை உருவாக்கி நடைமுறை படுத்துகையில்! இதுவொன்றும் அவ்வளவு கடுமையான சட்டமில்லையே..

(‪#‎குறிப்பு‬:- இச்சட்டவிதியானது மஸ்ஜித்களை நிர்வகிக்கும் "முஸ்லிம் விவகார அமைச்சின் (வக்ப் சபை) விதிகளுக்கோ, நாட்டின் சிவில் சட்ட விதிகளுக்கோ, மனித உரிமை சட்ட வரிகளுக்கோ எவ்வகையிலும் முரணாக அமையாது.)

இறைவனி்ன் அன்பையும், ஏழைக்குமரிகளின் பிரார்தனையையும், சமூகத்தின் மறுமலச்சியையும் பெற்றுத்தரும் இச்சட்டவிதி குறித்து பள்ளி பரிபாளன சபைகள் போதிய கவனம் எடுப்பார்களா!!!!!!!.......

"யா அல்லாஹ் இச்சமூகத்தை சீதனம் எனும் சீர்கேட்டிலிருந்து பாதுகாப்பாயாக"
சாமானியன்:- அபூ ஸுமையா

Post a Comment

0 Comments