Subscribe Us

பெண் போன்று ஆடை அலங்காரம் செய்து 11 ஆண்களை மயக்கித் திருமணம்


பெண் போன்று ஆடை அலங்காரம் செய்து 11 ஆண்களை மயக்கித் திருமணம் செய்த பின் திருமண அன்பளிப்பாக கிடைத்த பணத்துடனும் பொருட்களுடனும் நபரொருவர் தலைமறைவாகிய சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

மியவோ சோங்தவோ என்ற மேற்படி 27 வயது நபர் கடந்த ஒரு வருட காலப் பகுதியில் இணையத்தளம் மூலம் தனக்கு அறிமுகமான ஆண்களை பெண்ணாக நடித்து திருமணம் செய்த பின்னர் இவ்வாறு அன்பளிப்பாக கிடைத்த பணம் மற்றும் பொருட்களுடன் தலைமறைவாகியுள்ளார்.

இந்நிலையில் மியவோ, வாங் என சுருக்கப் பெய ரால் அழைக்கப்படும் நபரை பல மாதங்களாக காதலித்து ஏமாற்றிய பின்னர் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் அவரை திருமணம் செய்திருந்தார்.

இந்நிலையில் வாங் தனது புது மனைவி திருமணமாகி 3 நாட்களில் திருமண அன்பளிப்பு பணம் மற் றும் விலையுயர்ந்த பொருட்களுடன மாயமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

எனினும் வாங்கிற்கும் மியவோவுக்குமிடையே ஏற்பட்ட சிறிய தகராறு காரணமாகவே அவர் கோபம் காரணமாக சென்றுள்ளதாக நம்பிய வாங்கின் குடும்பத்தினர் அது தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ய முயற்சிக்கவில்லை.

ஆனால் வாங் வசித்து வந்த நகருக்கு அருகில் வாழ்ந்த நபரொருவர் தனக்கு இணையத்தளத்தில் அறி முகமான மியவோ ஸியயோமின் என்ற பெண் பல் வேறு வழிமுறைகளைக் கையாண்டு தன்னிடமிருந்து சுமார் 31,000 யுவான் பெறுமதியான பணத்தை அபகரித்துச் சென்றுள்ளதாக பொலிஸாரிடம் அண்மையில் முறைப்பாடு செய்ததையடுத்தே வாங்கிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் சந்தேகம் ஏற்பட்டது.

தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட தீவிர தேடு தல் நடவடிக்கையையடுத்து மியவோ கைதுசெய்யப்பட்டார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்தே அவர் ஆண் என்பதும் அவர் பெண் வேடமிட்டு 11 ஆண்களை ஏமாற்றியதும் அம்பலமாகியுள்ளது.

அவரது வீட்டிலிருந்து ஒரு தொகை பெண்களது போலி கேசங்கள், குதி உயர்ந்த பாதணிகள் மற்றும் பெண்களது உள்ளாடைகள் என்பன கண்டுபிடிக்கப்பட் டுள்ளன.

Post a Comment

0 Comments