இலங்கைப் பனிப்பெண்ணுக்கு செலுத்தமால் இருந்த 13 வருட நிலுவை சம்பளத்தை (SR66,800) செலுத்தமாறு தொழில் வழங்குனரை சவூதி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள ஒரு செய்தியை ஊடகங்களில் காணக்கிடைத்தது.
இந்தமாதிரி வெளிவராத ஆயிரம் சோகக்கதைகள் மத்தியக்கிழக்கில் தினம் தினம் அரங்கேரிக் கொண்டுதான் இருக்கின்றன.
மத்திய கிழக்கு நாடுகளில் வாழும்போதுதான் இந்தப் பணிப் பெண்கள் படும் கஷ்டங்களை நேரடியாகக் காணக் கிடைக்கிறது.
எமது சமூகத்தில் பரவலாகப் பேசப்படவேண்டிய, தீர்வு காணப்படவேண்டிய மிக முக்கிய பிரச்சினை இது.
பணிப் பெண்களாக ஏன் வெளிநாடு செல்லேண்டிய நிலை எமது சமூகத்துப் பெண்களுக்கு ஏற்படுகிறது என்பதை ஆராய்ந்து அவர்களுக்கு இலங்கையில் வாழ்வதற்குறிய, தொழில் செய்வதற்குறிய ஒரு சமூகக் கட்டமைப்பை உருவாக்குவது நம் அனைவருதும் கடமை.
அதை விட்டு விட்டு மஹ்ரமில்லாமால் வெளிநாடு போவது ஹராம்,பணிப் பெண்ணாக செல்பவர்கள் எல்லோருமே மோசமானவர்கள் என்பது மாதிரியான கதைகளை சொல்லிக் கொண்டிருப்பது நம் முகத்தில் நாமே உமிழ்ந்து கொள்வதற்குச் சமம்.
பொதுவாக வீட்டுப் பணியாளர்களாக செல்லும் பெண்கள் கணவனால் கைவிடப்பட்டவர்கள்,கணவனை இழந்தவர்கள்,உருப்படி இல்லாத கணவன்களுக்கு வாக்கப்பட்டவர்கள்,திருமண வயதை அடைந்தும் திருமணமாகாத பெண்கள் இப்படி வாழ்க்கையில் துனைக்கு,உதவிக்கு யாருமில்லை என்ற நிலைக்கு தள்ளப்படும் பெண்களே வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக தொழிலுக்கு செல்கிறார்கள்.
ஒவ்வொரு முஸ்லிம் ஊரில் இருந்தும் மிகக் குறுகிய தொகையினரே இப்படி பணிப்பெண்களாக வெளிநாட்டுக்கு செல்கிறார்கள்.ஊர்களின் பள்ளி நிர்வாகங்கள் நினைத்தால் கூட இப்படியானவர்களின் குடும்பங்களை அனுகி இவர்களுக்கு உள் நாட்டிலேயே தொழில் செய்யக் கூடிய வசதிகளை செய்து கொடுக்க முடியும்.
அல்லது வாழ்வாதரத்துக்கு உதவிகளைப் பெற்றுக் கொடுக்க முடியும்.
ஏன் என்றால் ஆரம்பித்தில் பயந்து பயந்து வெளிநாட்டுக்கு வரும் இந்த பணிப்பெண்கள் கொஞ்ச நாட்களில் இந்த வாழ்க்கையோடு ஒன்றிப் போய்விடுகிறார்கள் பின்னர் அவர்களை இந்த வாழ்க்கையில் இருந்து கழட்டி
எடுப்பது கஷ்டம்.


0 Comments