Subscribe Us

மொஹமட் நிஷோஸின் ( மே டே மழை) கவிதை தொகுப்பு.



Mohamed Nizous

மழையே மழையே மெத்தப் பெய்
மகிந்தையின் கூட்டம் கலையப் பெய்
பழைய தலைகள் கிருலப்பனை
நுழையாதிருக்க அலையாய்ப் பெய்

ஊர்வலம் செல்லும் ஊர்திகளில்
யாரும் செல்லா திருக்கப் பெய்
வார எல்லா தலைவர்களும்
ஜோராய் சொல்வார் சுத்தப் பொய்.

மே டே கூட்டம் போட்டவரின்
மேடை நீரில் ஓடப் பெய்.
கூட இருக்கும் கூட்டாளி
நாடே அறிந்த கெட்ட பேய்.


தொழிலாளி பெயரால் அரசியலை
தொழிலாய்ச் செய்வோர்  தொலையப் பெய்
இழிவாய் இனங்களை நடத்தியவர்மேல்
பொழிவாய் வெள்ளம் புரண்டோட.

மீண்டும் இவர்கள் பலம் பெற்றால்
ஆண்டியாகி நாடழியும்
வேண்டா மனிதர்கள் ஒழிந்திடவே
சீண்டும் மழையாய் பொழிந்திடுவாய்

Post a Comment

0 Comments