Subscribe Us

header ads

முஸ்லிம்களை தீவிரவாதி என்று செய்தி பிரசுரிப்பதில் ஒரு அலாதி இன்பம் ஊடகங்களுக்கு : நேற்றைய விமான கடத்தல்

Pic : Al-Mashoora
எகிப்திய விமானத்தை கடத்திய நபர் இப்றாஹிம் சம்ஹா அவரும் எகிப்தை சேர்ந்தவரே.. சைப்ரசை சேர்ந்த தன் மனைவியுடன் அவர் பேச வேண்டும் என்பதற்காகவே விமானத்தை கடத்திச்சென்று சைப்ரசில் தரையிறக்கியுள்ளார்.. அரபு மொழியில் ஏழு பக்கங்களில் தன் மனைவிக்கு எழுதப்பட்ட கடிதத்தையும் அவர் பாதுகாப்பு பிரிவினரிடம் ஒப்படைத்திருக்கிறார்..

சில மனநோயாளிகள் இப்படி முன்னுக்கு பின் முரணான காரியங்களை செய்துவிட்டு பின்னர் விழி பிதுங்கி நிற்பதுண்டு. அந்த நபர் உணமையில் தீவிரவாதியாக இருந்திருந்தால் விமானத்தில் இருந்த 82 பேரில் 70 பேரை விடுவித்திருக்கவேண்டிய தேவையில்லை மொத்தமாக தங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரையில் அவர்களை பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருக்க முடியும்.. அது மட்டுமின்றி எந்தவொரு விமான கடத்தலையும் தனியொரு தீவிரவாதியினால் வெற்றிகரமாக நடத்த முடியாது அவர்களுக்கு மூன்றுக்கு மேற்பட்டவர்களின் உதவி தேவை..

ஆக விமானம் கடத்தப்பட்ட செய்தி கிடைத்தவுடன் மிக அவசர அவசரமாக முஸ்லீம் தீவிரவாதி விமானத்தை கடத்திவிட்டான் என்று செய்தி பிரசுரிப்பதில் ஒரு அலாதி இன்பம் ஊடகங்களுக்கு நடந்தது என்ன என்ற விபரமும் அவர்களுக்கு தேவையில்லை கடத்தியவர்கள் யார் என்ற விபரமும் அவர்களுக்கு தேவையில்லை.

மேற்கூறிய தகவல் எகிப்து எயார்வேசின் உத்தியோக பூர்வ தகவல்.

-Razana Manaf-

Post a Comment

0 Comments