Subscribe Us

நீங்கள் ஒரு வேலை இல்லாத பட்டதாரியா ?அல்லது உங்கள் குடும்பத்தில், நட்பு வட்டத்தில் யாரும் வேலை இல்லாத பட்டதாரிகள் உள்ளனரா ?


நல்லந்தளுவையில் அமைந்திருக்கும் எனது வீட்டுக்கு ஒரு பட்டதாரி வந்தார் .
அவர் அவரின், ஆதங்கம் , வேதனை , இயலாமை அனைத்தையும் என்னிடம் கொட்டி, இதற்கெல்லாம் ஒரு தீர்வு இல்லையா ? எனும் கேள்வியையும் என்னிடம் எழுப்பினார் .

அவரின் ஆதங்கம் இப்படி தான் இருந்தது - புத்தளம் கல்வி வலயத்திற்குள் 1000 பட்டதாரிகள் வேலைவாய்ப்பு அற்று இருப்பதாகவும் சிலர் வெளிநாடுகளுக்கு சென்று தொழில் செய்கிறார்கள், இன்னும் சிலர் தனியார் துறைகளில் ஊருக்கு வெளியே சென்றே பணி புரிகிறார்கள், இன்னும் சிலர் ஒன்றுமே இல்லாது வெட்டியாக உள்ளனர் . இதே நேரம் நம்மோடு ஒன்றாக படித்து கல்வியியல் கல்லூரிக்கு (College Of Education) செல்வோர் அங்கிருந்து வெளியாகும் போதே தொழிலோடு வெளியாகின்றனர் . இந்த நிலை காரணமாக வருங்காலத்தில் பல்கலைகழகம் தெரிவாகுவோர் அதை புறக்கணித்து கல்வி கல்லூரியை நாடும் நிலை உருவாகலாம் . நாங்கள் பல்கலைகழகத்தில் படிக்கும் போது எனது மகன் அங்கு கற்கிறான் என்று பெருமையாக பிறரிடம் சொன்ன ஒரு தந்தைக்கு அதே மகன் படித்துவிட்டு வேலை இன்றி இருக்கும் போது எப்படி கவலை இருக்கும்?

இப்படி பேசிய அவரின் பேச்சு என்னை சிந்திக்க வைத்தது . ஆகவே , இதற்கு ஒரு உடனடி தீர்வை பெற வேண்டிய தேவை இருப்பதை உணர்கிறேன் .



இந்த ஆயிரம் பட்டதாரிகளையும் உடனடியாக வேலைவாய்ப்புக்குள் உள்வாங்கும் முகமாக ஒரு தீர்வு திட்டத்தை நமது பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி ஊடாகவும் , நமது தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஊடாகவும் , ஜனாதிபதி பிரதமர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வை பெற நடவடிக்கை எடுக்க உள்ளேன் .



வடமேல் மாகாணத்தில் உள்ள 08 கல்வி வலயங்களில் , எட்டாவதாக இருக்கும் நமது புத்தளம் கல்வி வலயத்திற்குள் இவர்களை உள்வாங்கி , இருக்கின்ற சகல ஆசிரியர் பற்றாக்குறையையும் இவர்களை கொண்டு பூர்த்தி செய்ய நினைக்கிறேன் .



அன்பு பட்டதாரிகளே !




உங்கள் பெயர் , விலாசம்,வயது , தொலைப்பேசி இலக்கம் என்பவற்றை நமக்கு SMS செய்யுங்கள் . அல்லது உங்கள் சுயவிபரக்கோவை ஒன்றை நமக்கு தபால் மூலம் அனுப்பி வையுங்கள் .


இதை வாசிக்கும் நண்பர்கள் உங்களுக்கு தெரிந்த வகையிலோ ? , அல்லது உங்கள் குடும்பத்திலோ பட்டதாரிகள் இருந்தாலோ ? அவர்களிடம் இந்த விடயத்தை தெரிவியுங்கள் .

SMS - 076 7861 985 ADDRESS - S .A .EHYA ''SALIHA VILLA'' KADAYAMOTTAI
MADURANKULI
PUTTALAM

Post a Comment

0 Comments