காமக் கொடூரனுகளின் பசிக்கு இரையாகிப் போகும் இன்னும் எத்தனை பிஞ்சுகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடிக்கப் போகின்றோம்...???

மாத இதழ் போல், வார இதழ் போல், நாளிழதல் போல் இவ்வாறான சம்பவங்களும் செய்திகளும் அடிக்கடி வந்த வண்ணமே உள்ளது மனது நொந்த வண்ணமே உள்ளது.

நீங்கள் நீதி கேட்டு என்ன மண்ணாங்கட்டி போராட்டம் நடாத்தினாலும் விசாரணை, கோட்டு, நீதி, ஜெயில், பின்னர் பிணை என்று அவர்கள் வெளியே வந்து விடுவார்கள் இதுதான் நடக்கப் போகின்றது.

இதற்கு முன்னர் இப்படி இரையான விந்தியாவின் கொலையாளிகளுக்கு என்னாச்சி...?? இன்னும் அவர்கள் உயிரோடுதானே இருக்கின்றார்கள்.

இந்த விஷக் கிருமிகள் எல்லாம் கொல்லப்பட வேண்டியவர்களே..!!

செல்வி ஹரிஸ்ணவி வீட்டிலே தனியாக இருந்த வேளைதான் பலாத்காரப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

ஆகவே தயவு செய்து

01. உங்கள் பெண் பிள்ளைகளை வீட்டில் தனியா விட்டு விட்டு எங்கும் செல்லாதீர்கள்.

02. பாடசாலைக்கு செல்லும் போதும், வரும் போதும் அந்த நேரத்துக்கு உடனிருந்து அழைத்து வாருங்கள்.

03. அறியமுகமில்லாத மற்றும் அறிமுகமான யாரையும் தக்க காரணமின்றி வீட்டிற்குல் அழைக்காதீர்கள்.

04. பெண் குழந்தைகளுக்கு இறுக்கமான, அங்க அவயவங்கள் புடைத்து தெரியும்படியான ஆடைகளை அணிவிக்காதீர்கள்.

05. உங்கள் இரு கண்களில் ஒரு கண்னை எப்போதும் உங்கள் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பிற்காக வையுங்கள்.

மக்கள் நண்பன்
சம்மாந்துறை அன்சார்
இலங்கை.