Subscribe Us

பெண்களுக்கு 40 வயது தொடக்கத்தில் வரும் மூட்டு வலியை தடுக்கும் வழி

பெண்களுக்கு பெரும்பாலும் 40 வயதை தொடும் போதே தொற்றி கொள்கிறது இந்த மூட்டு வலி இம்சை. இதற்கு முக்கிய காரணம் உடலில்போதுமான சுண்ணாம்பு சத்து (கால்சியம்) சத்து இல்லாததே. மேலும் கால்சியம் பற்றாக்குறையால் இந்த காலகட்டத்தில் தான் மாதவிடாய் பிரச்சனைகளும் தலைதூக்கும். 

அதனால் தான் பெண்கள் கருவுற்ற மற்றும் பிரசவமாகி குழந்தைக்கு பாலுட்டும் நேரங்களில் கால்சியம் நிறைந்த உணவுகளை அதிக அளவில் சாப்பிட வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். பிரசவத்துக்கு பின் குழந்தைகளை கவனிப்பதில் மிகுந்த அக்கறை கொள்ளும் பெண்கள். தங்களது உடல் நிலை பற்றி ஆர்வம் காட்டுவதே இல்லை. 

இதுதான் மூட்டுவலிக்கு முதல்படி. நாம் நலமாக இருந்தால் தன் குழந்தைகளை நன்கு கவனித்து கொள்ள முடியும். என்பதை உணர்ந்து ஆரோக்கிய உணவுகளை உண்ண பழகலாமே. குறிப்பாக முளை கட்டிய தானியங்களை பெண்கள் தினமும் சாப்பிட்டு வர மூட்டுவலியை தடுக்கலாம்.

Post a Comment

0 Comments