Subscribe Us

வரலாற்றில் இன்று.... பெப்ரவரி - 18

1229: புனித ரோம் பேர­ரசின் மன்னன் இரண்டாம் பிரெ­டெரிக் எகிப்­திய மன்னன் அல் - கமீல் உடன் 10 ஆண்டு போர் நிறுத்­தத்­துக்கு உடன்­பட்டான்.

1478:  இங்­கி­லாந்தின் நான்காம் எட்­வேர்ட்­டிற்கு எதி­ராக சதி முயற்­சியில் இறங்­கி­ய­தற்­காக அவ­னது சகோ­தரன் ஜோர்ஜ்  தூக்­கி­லி­டப்­பட்டான்.

1797: பிரித்­தா­னி­யர்­களால் ட்ரினிடாட் தீவு கைப்­பற்­றப்­பட்­டது.

1865: அமெ­ரிக்க உள்­நாட்டுப் போர்: வில்­லியம் ஷேர்மன் தலை­மை­யி­லான கூட்டுப் படைகள் தென் கரோ­லி­னாவின் மாநில அவையைத் தீயிட்டுக் கொளுத்­தினர்.

1911: முத­லா­வது அதி­கா­ர­பூர்­வ­மான விமான அஞ்சல் சேவை இந்­தி­யாவின் அல­கா­பாத்தில் ஆரம்­ப­மா­னது. 23 வயது விமா­னியான ஹென்றி பெக்கெட் சுமார் 6500 கடி­தங்­களை 13 கி.மீ. தொலை­வி­லுள்ள நைனி எனும் இடத்தில் விநி­யோ­கித்தார்.

1930: கிளைட் டொம்பா ஜன­வ­ரியில் எடுத்த புகைப்­ப­டங்­களை ஆராய்­கையில் புளூட்­டோவைக் கண்­டு­பி­டித்தார்.

1932: சீனக் குடி­ய­ர­சிடம் இருந்து மன்­சூ­கு­வோவின் விடு­த­லையை ஜப்பான் மன்னர் அறி­வித்தார்.

1957: நியூஸிலாந்தில் முதல் தட­வை­யாக சட்­டபூர்வமான மரண தண்­டனை நிறை­வேற்­ற­பப்ட்­டது.

1957 : கென்­யாவின் கிளர்ச்சித்  தலைவர் டெடான் கிமாத்தி பிரித்­தா­னிய குடி­யேற்ற அர­சினால் தூக்­கி­லி­டப்­பட்டார்.


1969: அமெ­ரிக்­காவில் இடம்­பெற்ற விமான விபத்தில் 35 பேர் உயி­ரி­ழந்­தனர். 


1959 : நேபா­ளத்தில் பெண்­க­ளுக்கு வாக்­கு­ரிமை வழங்­கப்­பட்­டது.


1965 :  ஐக்­கிய இராச்­சி­யத்­திடம் இருந்து காம்­பியா, சுதந்­திரம் பெற்­றது.


1979 : தெற்கு அல்­ஜீ­ரி­யாவில் சகாரா பாலை­வ­னத்தில் முதற் தட­வை­யாக பனி மழை பெய்­தது.


2001: இந்­தோ­னே­ஷி­யாவில்  இன வன்­மு­றைகள் ஆரம்­பித்­தன. இதனால் சுமர் 500 பேர் பலி­யா­ன­துடன் ஒரு இலட்சம் பேர் இடம்­பெ­யர்ந்­தனர்.


2003:  தென் கொரி­யாவில் சுரங்கப் பாதை ஒன்றில் ஏற்­பட்ட தீயில் சிக்கி சுமார் 200 பேர்  உயி­ரி­ழந்­தனர்.


2004 : ஈரானில் இரா­சா­யனப் பொருட்­களை ஏற்றிச் சென்ற ரயில் ஒன்று தீப்­பற்­றி­யதில் சுமார் 200 மீட்புப் பணி­யா­ளர்கள் உட்­பட 295 பேர் பலி­யா­கினர். 


2007 : டில்­லியில் இருந்து பாகிஸ்­தா­னுக்குச் சென்­று­கொண்டு இருந்த 'சம்­ஜ­வுதா அதி­க­வேக ரயிலில்  குண்டுகள் வெடித்து தீ பிடித்ததில் 68 பேர் உயிரிழந்தனர்.


2014: யுக்ரைனின் கீவ் நகரில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையிலான மோதலில் 76 பேர் உயிரிழந்தனர்.


Post a Comment

0 Comments