ஜஸ்ட் போர் ஜாலி....
1. ஹாய் பிரண்ட்ஸ்....புதுசா ஒரு புஷ் பைக் வாங்கி இருக்கன்...லுமாலா பிராண்ட்....பீலிங் ஹாப்பி
2. நாளைக்கி பெருநாளாம்....பள்ளி அதியாரி இப்பதான் சந்தில சத்தமா சொல்லிட்டு போறாரு ... பீலிங் blessed
3. அஞ்சி மாசத்திற்கு முன்னாடி அப்ளை பண்ணின லேண்ட் லைன் போன் இன்னிக்கி எங்க வீட்டுக்கு வருது....வாவ் வி ஆ லக்கி.....
4. வாப்பா வெளிநாட்ல இருந்து அனுப்பின கடிதம் ஒரு மாசம் கழிச்சி இப்பதான் வந்தது..., வி மிஸ் யு டாட்....
5. நாளைக்கி நான் கொழும்புக்கு போற பிரண்ட்ஸ்....காலைல நேரத்தோட எழும்பணும்....பஸ் பிடிக்கணும்..சோறு கட்டனும்...
6. அப்பாவி விவசாயிகளை கொன்று குவித்த புலிகளை வன்மையாக கண்டிக்கின்றோம்...
7. நேற்று புல்லா ஊருக்குள்ள ஆர்மிதான்....சரியான தூக்கம் இல்ல...
8. நேத்து வந்த முஸ்லிம் காங்கிரசை விட நாங்கள் ஆண்டாண்டு காலமா ஆதரிக்கும் பச்சையும் நீலமுமே சிறந்தது...
9. என் நண்பனோட வாப்பா வெளிநாட்டுக்கு போறாரு...வீடே மௌத்தான மாதிரி இருக்கு... பீலிங் sad
10. யாரும் என்னோட மொடோறோலாவுக்கு கோல் பண்ற எண்டா, என் வீட்டு லேன்ட் லைனுக்கு கோல் பண்ணி சொல்லுங்க....ஏன் எண்டா சிக்னல் தேடி நான் எங்க வீட்டு கூரைமேல ஏறனும் பிரண்ட்ஸ்...
11. எங்க வீட்டு காலியான போட்டோ இது .... எப்படி வெள்ளச்சீல, தென்னம் குருத்து, welcome போர்ட் பிரண்ட்ஸ்...
12. பின்னேரம் கிளங்குக்கடைக்கு நடந்து போகணும்...என்கிட்டே 3 ரூபா இருக்கு...
13. இன்னிக்கி ஸ்கூல் ல இருந்து நேரத்தோட சுவரால ஏறி ஜம்ப் பண்ணும் போது டிசிப்ளின் மாஸ்டர் கண்டுட்டாறு...நாளைக்கு என்னாகுமோ...
பிரே போர் மீ பிரண்ட்ஸ் ....
14. புதுசா வாங்கின மார்டின் சேர்ட்....எப்படி பிரண்ட்ஸ் இருக்கு...
15. பாருக்ட கொட்டிலில "ரம்போ -2" படம் போகுது...பயங்கர சண்டைப்படம்....மிஸ் பண்ணாதிங்க.
16. ஊர்ல உம்மாவுக்கு கோல் எடுக்க போன் பூத்த தேடி கண்டுபிடிச்சா...அங்க ஒருவன் ஒரு மணி நேரமா கடல போட்டுக்கு இருக்கான்...,
-Athambawa Waaqir Hussain-


0 Comments