Subscribe Us

தயவுசெய்து இதை போட்டு இனவதத்தை வளர்க்க வேண்டாம்


இதை முகநூல் படமாக போடுகின்றனர்.தயவு செய்து இதை போட்டு இனவதத்தை வளர்க்க வேண்டாம் .

தயவுசெய்து அகற்றுங்கள் , முஸ்லிம்களை பலி கொடுக்க விரும்புகின்றீர்களா ?

அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்
இனவாதம் உண்மையிலேயே அழிக்கப்படவேண்டியது. 
தேசத்தையும், மக்களையும், கலாசாரத்தையும் அழிப்பது இந்த வாதம். இந்த இனவாதம் சிறிய சமாச்சாரம் அல்ல. உலகை தொடர்ந்தும் பயத்தில் வைத்திருக்க உதவுவது. இந்த வாதம் அழிக்க வேண்டிய பிரிவுச் சிந்தனைகளை மீளவும் புதிய கோலங்களோடு பிறக்க வைக்கின்றது. பிரிவுதான் எமது வாழ்வின் அடிப்படை, மூலக் கொள்கையா?
இனவாதப் பிரிவுகள் மோசமானவை. அவை இனங்களை அழிப்பன. உலக மனிதாபிமானத்தினை துண்டு துண்டுகளாக உடைப்பன .இனவாதம் இல்லாத நாடுகளை ஒருபோதுமே தேட முடியாது. சில நாடுகளில் இது பெரிதாக இருக்கலாம். ஆனால் பல நாடுகளில் இது மறைக்கப் படவில்லை. ஹிட்லரின் இன வாதத்தைக் காப்பதற்கு இன்றும் பல நாடுகளில் அமைப்புகள் உள்ளன. Ku Klux Klan இன்றும் அமெரிக்காவில் இனவாதத்தைக் காத்துக்கொண்டு உள்ளது. 40 கிளைகள் இதற்கு உள்ளன.
நிறையப் படைப்பாளிகளும், புத்திஜீவிகளும், சர்வதேச அமைப்புகளும் இனவாதம் மனித வாழ்வுள் தரும் நெருக்கடிகளை எமக்கு அறிமுகப்படுத்துகின்றனர். ஆனால் புதுப் புது விதமாக இனவாதம் வளர்கின்றது. இன்று உலக கலாசாரமாக மாறியுள்ளது இனவாதம். இது மனித அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது.
இதுகளை கொண்டு முகநூல் வாயிலாக சாதிக்க நினைப்பது என்ன சற்று சிந்தியுங்கள் நண்பர்களே இனவாதத்தை தூண்டும் அவர்களுக்கும் எமக்கும் என்ன வித்தியாசம்.
-jeezan azeer-

Post a Comment

0 Comments