Subscribe Us

பிள்ளைகளின் சாதனைகளுக்கு பெற்றோர்கள் பாரிய பங்களிப்புக்களை செய்யவேண்டும் - சுகாதார அமைச்சர் நஸீர் (PHOTOS)

பைஷல் இஸ்மாயில் –

இன்றைய இளம் சந்ததியினர் சிறு வயதிலேயே பல சாதனைகளை புரிந்து வருகின்றனர். அவர்களின் அறிவு விருத்தியும், கல்வி வளர்ச்சியும் காலத்தின் வேகத்துக்கெற்ப செயற்பட்டு வருவதை நாம் இதன் மூலம் காணக்கூயதாக உள்ளது என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.

விஸ்டம் அகடமியின் 2015 ஆம் ஆண்டு மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் விழா (19) அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலை கேட்போர் கூடத்தில் அதன் பணிப்பாளர் எம்.இர்பான் தலைமையில் இடம்பெற்றபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

இளம் சந்ததியிரை நாம் ஒருபோதும் மிக இளேசாக கருதிவிட முடியாது. அவர்களின் வேகமும், விவேகமும் காலத்துக்கெற்றாப்போல் இயங்கிக்கொண்டிருக்கின்றது. முன்னர் இருந்த சந்ததியினரைப்போல் இப்போதுள்ள சந்ததியிரை ஒருபோதும் ஒப்பிட்டு பார்க்க முடியாது. அந்தளவு அவர்களின் அறிவு விருத்தியும், செயற்பாடுகளும் அமைந்து காணப்படுகின்றன.

அதுமாத்திரமல்லாமல் ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புக்கள் போன்ற பல சாதனைகளையும் படைத்து வருகின்றார்கள். அந்தளவு தொழினுட்ப வளர்ச்சியும் இன்று வளர்ந்து காணப்படுகின்றது. இவ்வாறான இயக்கப்பாடுள்ள பிள்ளைகளுக்கு பெற்றோர்களாகிய நாம் அவர்களுக்கு ஆதரவு வழங்கி அவர்களின் திறமைக்கு ஏற்றாப்போல் எமது பங்களிப்புக்களை வழங்கி வரவேண்டும்.

அப்போதுதான் எமது பிள்ளைகள் எதிர்காலத்தில் பல சாதனையாளர்களாகவும், படைப்பாளிகளாகவும், விஞ்ஞானிகளாகவும் சிறந்து விளங்குவார்கள் என்றார்.

இவ்விழாவில் கிகழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.எ.அன்ஸில், சுகாதார அமைச்சரின் ஆலோசகரும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமாகிய எஸ்.எல்.முனாஸ், சுகாதார அமைச்சரின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி எம்.ஐ.எம்.நயீம், உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.






Post a Comment

0 Comments