Subscribe Us

Oxford நிறுவனத்திற்கே ஆங்கிலம் கற்பித்த . இஸ்லாமிய மார்க்க அறிஞர்


சில தினங்களாக சமூக வலை தளங்களின் மலையாள பக்கங்களில் சிறப்பிக்க படுகிறார் மார்க்க அறிஞர் மெளலவி . அப்துல் நூர் 

மலப்புரம் மாவட்டம் செம்மாடு தாருல் ஹீதா அரபி பல்கலையில் மார்க்க கல்வி கற்று தேர்ந்த பின்னர் ஆங்கில இலக்கியத்தில் முதுகலையும் B.Ed, ம் தேர்வும் பெற்றவர். மார்க்க அறிஞர் மெளலவி . அப்துல் நூர்

“Tips On English Pronounciation” என்ற தலைப்பிலான புத்தகம் தயாரிப்பிலிருக்கும் மெளலவி . அப்துல் நூர், ஆக்ஸ்போர்ட் டிக்ஷனரியின் ஆன்லைன் பதிப்பில் பல்வேறு தவறுகள் இருப்பதை கண்டுபிடித்தார் தவறுகளை சுட்டிக்காட்டி Oxford நிறுவனத்திற்கு அனுப்பிய E-mail-ஐ பரிசீலித்த Oxford நிர்வாகம் தங்களது தவறை உணர்ந்ததோடு எட்டாவது பதிப்பில் சரியான வார்த்தைகளை வெளியிடுவதாக E-mail மூலம் பதில் தெரிவித்துள்ளனர்

மெளலவி . அப்துல் நூர் தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார் 

இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் என்றால் அவர்களுக்கு ஆங்கிலம் தெரியது என்ற காலம் மலையேறி ஆக்ஸ்போர்டுக்கே ஆங்கிலம் கற்பிக்கும் ஆற்றல் மிக்கவாகளாக மார்க்க அறிஞர்கள் உருவெடுத்திருப்பது பாராட்டுக்கு உரியதே நாமும் பாராட்டுவோம் 


Post a Comment

0 Comments