அமைச்சர் ரிஷாத் இன் பக்கம் :
1. முஸ்லிம்கள் வாழ்ந்ததற்கான வரலாற்று ஆவணங்களை தக்க நேரத்தில் வெளிப்படுத்தி விவாதித்தமை (+)
2. பரீட்சயமற்ற மொழியிலும் தன்னால் இயன்ற அளவு இறுதிவரை போராடியமை (+)
3. நடுவர்களின் இனவாதம் பூசிய பல கேள்விகளுக்கு மிக்க நிதானமாகவும், சானக்கியத்தனமாகவும் பேசியமை (+)
#மகே சமாஜ ????
4. தன்னை தேரரும், நடுவர்களும் ஒன்றுசேரவே கேள்விகளாலும், குறுக்கிட்ட பேச்சுகளாலும் வாயடைக்க முயன்ற போதெல்லாம் நிறுத்தாது பேசியது (+)
5.தன் சொத்து விவகாரம் தொடர்பில் தேரர் வினாவெழுப்பிய போதெல்லாம் அமைதி காத்தமையும், தடுமாறியதும் ( - )
# காணி உறுதிகள் , # maga
6. அடிக்கடி சம்மந்தமில்லாத வண்ணம் முஸ்லிம், முஸ்லிம் என்று தனித்து பேசியமை ( - )
7. தன் மேல் சுமத்தப்பட்ட "போதைப்பொருள் விற்பனை" குற்றச்சாட்டுக்கான அமைச்சரின் பதிலடி மைனஸ் ( - )
பாஹியன்கல ஆனந்த சாகர தேரர் பக்கம் :
1. அதிக தேடல் கொண்டவர் (+)
2. 2012 (மரிச்சுக்கட்டி, கரடிக்குழி) போன்ற போன்ற பிரதேசங்கள் வில்பத்து வனவிலங்கு சரணாலயத்திற்குரியது என்று Gazate பண்ணும் போதெல்லாம் ஒரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரான நீங்கள் எங்கு இருந்தீர்கள் ??? ( இது போன்ற நியாயமான கேள்விகள் + )
3. தான் ஒரு இனவாதி என்பதனை தன்னை அறியாமலேயே சில வெளிப்படை துவேச கருத்துக்கள் மூலம் வெளிக்காட்டியமை ( - )
4.தலைப்பிலிருந்து அடிக்கடி விலகிசென்றமை ( - )
# அமைச்சரின் குடும்ப, சொத்து விவகாரம் # அரபு நாட்டு நிதி உதவி # ஐ எஸ் ஐ எஸ் விவகாரம்
5. தன் பக்க நியாங்கள் தலைப்பிற்கு போதாததை கருத்திற்கொண்டு ஏனைய உத்திகளை கைக்கொண்டமை ( - )
# அல் - குர்ஆன் சத்திய வாக்கு மூலம்
துணிச்சலுடன் போராடிய அமைச்சருக்கு வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்.
ஆனால் இன்னமும் முற்றுப்பெறாத விடயமாக இவ்விடையம் இருப்பதே சில அரசியல் பெருச்சாளிகளுக்கு கொண்டாட்டமான விடயமே அவர்களது அரசியல் இலாபம் கருதி.
- யாசீர் எம். அனீபா -


0 Comments