முகத்தை மறைக்கும் வகையிலான தலைக்கவசம் ஒன்றில் கூரிய பாகங்கள் பொருத்தப்பட்டிருந்த நிலையில் இரு நபர்களை வெலிக்கடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஒன்றரை அங்குலம் அளவு கொண்ட 11 கூரான உலோகப் பகுதிகள் இந்த தலைக்கவசத்தில் பொருத்தப்பட்டிருந்ததோடு, அவை தலைக்கவசத்தின் நடுப்பகுதியில் முன்பக்கத்தில் இருந்து பின்பகுதிவரை பொருத்தப்பட்டிருந்தன.
எல்பிட்டிய பிரதேசத்திலுள்ள பெண்ணொருவரின் மோட்டார் சைக்கிளைத் திருடி அதில் பயணித்தவாறு கொழும்பு மற்றும் வெலிக்கடை பிரதேசத்தில் காணப்பட்ட சந்தேக நபர்கள் இருவரை கைது செய்து சோதனைக்கு உட்படுத்திய போதே கடுமையான காயங்களை ஏற்படுத்தக் கூடிய கூரிய பாகங்களைக் கொண்ட தலைக்கவசத்தை மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு, கொள்ளை மற்றும் பொதுமக்களின் சொத்துக்களை அபகரித்தமை போன்ற பல சம்பவங்களுக்காக குறித்த சந்தேக நபர்கள் பொலிஸாரால் தேடப்பட்டு வந்துள்ளனர்.
இதேவேளை, குற்றச் செயல்களுக்காக பயன்படுத்த கூடிய கூரிய பாகங்களைக் கொண்ட தலைக் கவசமொன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது இதுவே முதல் தடவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.


0 Comments