Ecquevillyயைச் சேர்ந்த இஸ்லாமியர்கள், இன்று ஒரு மிகமோசமான அனுபவத்தை அடைந்துள்ளார்கள். Mureaux விற்கு அருகில் இருக்கும், இந்தப் பகுதியின் பள்ளிவாசலின் வாயிலில், விசமிகள், பன்றித்தலை ஒன்றைக்கட்டித் தொங்க விட்டுள்ளார்கள்.
Rue Jules-Ferryயில் இருக்கும் இந்தப் பள்ளிவாசலின் நுழைவாயிலில், இது தொங்கவிடப்பட்டுள்ளது. காலை எட்டு மணிக்குப் பள்ளிவாசலிற்குச் சென்றவர்களிற்கு, இந்த அதிர்ச்சி காத்திருந்துள்ளது.
Mantes-la-Jolie யின் விசேடக் காவற்துறையினரின் தேடுதற்பிரிவினர், உடனடியாகக் களத்திற்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கட்டப்பட்ட பன்றித்தலையிலிருந்த கைரேகைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்று காலையிருந்து இந்தப் பள்ளிவாசலிற்குச் சிறப்புப் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.


0 Comments