Subscribe Us

முஸ்லிம்களுக்கு எதிரான சக்தி தொலைக்காட்சியின் செய்திச் சேவைக்கு எதிராக அணி திரள்வோம்.

பக்கச் சார்பற்ற ஊடகம் என்பது ஜனநாயக நாட்டின் அத்தியாவசியத் தேவைப்பாடாகும். இதனால் தான் ஒவ்வொரு ஊடகங்களும் தமது செய்திச் சேவைகளையும்,நிகழ்ச்சி நிரல்களையும் எவ்வித இன,மத,மொழிப் பாரபட்சமின்றி ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டும் என சகலராளலும் எதிர்பார்க்கப் படுகின்றது. 

என்றாலும் இலங்கையின் ``தமிழ் பேசும் மக்களின் சக்தி" எனக் கூறிக்கொள்ளும் சக்தி தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளும், செய்திகளும் இலங்கை வாழ் முஸ்லீம்களை ஓரக் கண் கொண்டு பார்க்கின்றமை மன வேதனை அளிக்கின்றது. அவ்வகையில் சக்தி குலோபல்(GLOBAL) என்ற உலகளாவிய தொழில் நுட்ப முறை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து மேற்கத்தேய ஊடகக் கொள்கையான "முஸ்லிம் எதிர்ப்பு" கொள்கையினை தமது ஊடகக் கொள்கையின் பிரதான அம்சமாக மாற்றிக் கொண்டதோ! என எண்ணத் தோன்றுகின்றது.  அவ்வாரான எண்ணக் கருவிற்கு கீழ்வருவன சான்றாகும். 

கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்ட போது அதற்கெதிரான முறையில் திட்டமிட்டு தமிழ் மக்களின் கருத்துக்கள் மாத்திரம் ஒளிபரப்பப்பட்டமை, வில்பத்து பிரச்சினையினை முஸ்லிம்களுக்கு எதிராக திசை திருப்பியமை, இறுதிக் கட்ட யுத்த முடிவில் இடம்பெயர்ந்த சகோதர தமிழ் அகதிகள் மற்றும் அரசியல் கைதிகளின் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வரும் அளவிற்கு கூட 1990 களில் புலிகளால் இனச் சுத்தீகரிப்பு செய்யப்பட்டு 25 வருட கால அகதி வாழ்க்கை வாழ்ந்து வரும் முஸ்லீம்களின் பிரச்சினைகள் வெளிக் கொண்டுவரப்படாமை, கடந்த வருடம் அலுத்கம, தர்ஹா டவுன் பகுதியில் இடம் பெற்ற முஸ்லீம்களுக்கு எதிரான கலவரத்தில் காட்டிய பாரபட்சம். மேலும் முஸ்லிம் அரசியல்வாதிகளை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் மி(இ)ன்னல் நிகழ்ச்சி என அடுக்கிக் கொண்டே போகலாம். 


இன்னும் செய்திகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மக்களால் இம்முறை நிராகரிக்கப்பட்ட முன்னைய பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு ஒதுக்கப்படுகின்ற நேரத்தின் அளவு கூட முஸ்லிம் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாமை. இவைகளை வைத்து நோக்குகையில் சக்தி தொலைக்காட்சி "தமிழ் பேசும் மக்களின் சக்தி" அல்ல "தமிழ் மக்களின் சக்தி" என்றே எண்ண வேண்டியுள்ளது.


எனவே இவ்வாறான பாரபட்சத்தினை எவ்வளவு காலம் தான் ஈமானிய நெஞ்சமுள்ள ஒவ்வொருவரும் சகித்துக் கொள்ள முடியும்? ஆகவே அன்பின் உறவுகளே கீழ்வரும் படத்தினை உங்கள் முகப்புத்தகத்தின் விபரப் படமாக ( PROFILE PHOTO) வாக மாற்றுவதன் மூலம் சக்தி தொலைக்காட்சியின் முஸ்லிம் எதிர்ப்பு நிகழ்ச்சிகளுக்கும், செய்திச் சேவைக்கும் எதிரான சமூக வலைத்தல பகிஷ்கரிப்புப் போராட்டத்திற்கு அணிதிரல்வோம்.....


Post a Comment

0 Comments