Subscribe Us

பொதுபல சேனா ஞானசார தேரர் பேசினால் அதுமட்டும் இனவாதமாம் - கொந்தளிக்கிறார் ஞானசார

தமிழ் மக்களுக்காக தமிழ் அரசியல்வாதிகள் பேசலாம், முஸ்லிம்களுக்காக முஸ்லிம் அரசியல்வாதிகள் பேசலாம். ஆனால் எந்தச் சிங்கள அரசியல்வாதியுமே வாய் திறக்காத சிங்கள சமூகத்திற்காக பொதுபல சேனா ஞானசார தேரர் பேசினால் அதுமட்டும் இனவாதமாம். தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் பேசினால் உரிமைக்குரல். நாம் பேசினால் இனவாதக் குரல். இது எந்த வகையில் நியாயமாகும். இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் பொது பலசேனவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்.

நாம் எந்தவொரு மதத்திற்கோ அல்லது இனத்திற்கோ எதிரானவர்கள் அல்லர். சிலர் எம்மை இனவாதிகளாகச் சித்தரித்து அதன் மூலமாகத் தமது காரியங்களைச் சாதிக்க முனைகிறார்கள். நாம் எமது இனத்திற்காக, எமது பௌத்த மதத்திற்காகக் குரல் கொடுக்கிறோம். அவ்வளவுதான். நாம் இனவாதம் பேசுகிறோம் என எவராவது கூறினால் தமிழருக்காகவும் முஸ்லிம்களுக்காகவும் குரல் கொடுப்போரும் இனவாதமாகப் பேசுவதாகவே அர்த்தம் கொள்ள வேண்டும். இதுவே உண்மை, இதுவே யதார்த்தம்.

நான் ஒரு மதகுரு. என்னால் பொய் கூற முடியாது. ஒருபோதும் கூறவும் மாட்டேன். எனது மதத்தை நான் நேசிக்கிறேன். அதேவேளை நான் எந்த மதத்திற்கும் எதிரானவன் இல்லை. நான் சகல மதங்களைப் பற்றியும் நன்கு அறிந்து வைத்துள்ளேன். என்னை எவரும் ஏமாற்ற முடியாது. எனது மதத்தை எவராவது சீண்டிப்பார்க்க நினைத்தால் நான் பொறுமையுடன் இருக்க மாட்டேன்.

Post a Comment

0 Comments