Subscribe Us

ஜனாதிபதி கடும் கண்டனத்தை வெளியிட்ட செக்ஸ் என்ட் லவ் நிகழ்வில் ஜனாதிபதியின் மருமகன் பங்கேற்பு

கொழும்பில் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற செக்ஸ் என்ட் லவ் இசை நிகழ்ச்சி தொடர்பில் இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று கடும் விமர்சனத்தை வெளியிட்ட நிலையில், அந்த இசை நிகழ்வில் மைத்திரிபால குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மருமகனும் பாதுகாப்பு அமைச்சின் பொதுமக்கள் தொடர்பு அலுவலருமான வேவல்பானவ கமகே திலின சுரஞ்ஜித் உட்பட்ட மூன்று நண்பர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

இவர்கள் டிசம்பர் 21ஆம் திகதியன்று அதிகாலை 3மணியளவில் எடுத்துக்கொண்டு புகைப்படம் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில் ஜனாதிபதி குறித்த நிகழ்வு இலங்கையின் கலாசாரத்துக்கு பங்கம் விளைவிப்பதாக கூறி அதன் ஏற்பாட்டாளர்கள் மீது கண்டனங்களை வெளியிட்டமையை கொழும்பின் ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

Post a Comment

0 Comments