இவ்வாண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரணதரப்பரீட்சை எதிர்வரும் 08 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இன்று நள்ளிரவுடன் இப்பரீட்சையுடன் தொடர்புடைய கருத்தரங்கு மற்றும் தனியார்வகுப்பு நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தினால்
விடுக்கப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் டபிள்யு. எம். கே புஷ்பகுமார மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் பரீட்சைகள் ஆணையாளர் மேலும்குறிப்பிடுகையில்.
இலங்கையில் நடைபெறுகின்ற பொதுப்பரீட்சைகளின் சட்ட விதிமுறைக்கமைவாக பொதுப்பரீட்சைகள் நடைபெறும் தினத்திற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு குறிப்பிட்ட அந்த பரீட்சையுடன் தொடர்புடைய எந்தவொரு கருத்தரங்கோ அல்லது தனியார்வகுப்புக்கள், கலந்துரையாடல், மாதிரி வினாத்தாள் உள்ளிட்ட விநியோக நடவடிக்கைகளுக்கு எமது பரீட்சைகள்சட்டத்தின்படி தடைவிதிக்கப்படும்.
அந்தவகையில் எதிர்வரும் 08ஆம் திகதி நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ள கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை தொடர்பில் இன்று நள்ளிரவு முதல் குறிப்பிட்ட இந்த பரீட்சை தொடர்பிலான மாணவர்களை அறிவுறுத்தும் அனைத்து செயற்பாடுகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இச்சட்டத்தை எந்த ஒரு தனி யார் கல்வி நிறுவனமோ அல்லது ஆசிரியர்களோ மீறுவார்களா யின்அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவ்வறிக்கையில்மேலும்குறிப்பிடப்பட்டுள்ளது.


0 Comments