-ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்-
இப்போது 3 நாட்களுக்கு முன், இலங்கை நேரப்படி அதிகாலை வேளை, சாகல தேரருடன் தான் மேற்கொள்ளவுள்ள வில்பத்து தொடர்பான விவாதம் பற்றி அமைச்சர் றிசாத் பதியுதீன் ஜப்னா முஸ்லிம் இணையத்தின் வட்ஸப் மூலம் உரையாடினார்.

வழமை போன்றில்லாமல் அவருடைய குரலில் சோகம் ததும்பியிருந்தது.
பல சந்தர்ப்பங்களில் ஜப்னா முஸ்லிம் இணையத்துடன் தனிப்பட்ட வகையிலும், பொதுவாகவும் 'தில்'லாக பேசும் அவர் அன்று கவலைப்பட்டவராகவே உரையாடினார்
ஒரு கட்டத்தில் அவர் அழுதார்...!
தனக்கு எதிராக பச்சை பொய் சொல்லப்படுவதாகவும், குறித்த விவாதத்தில் தான் பங்குகொள்ளாவிட்டால் இனவாத பௌத்த தேரர்கள் தெரிவிக்கும் விடயங்கள் சிங்கள சமூகத்திடையே அப்படியே படிந்துவிடுமெனவும், தான் வடக்கு முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்காவிட்டால் வேறு யார் குரல் கொடுப்பாரெனவும் அவர் அடுக்கடுக்கான கேள்வியை எழுப்பினார்.
சில முஸ்லிம் அரசியல்வாதிகளின் பெயர்களை குறிப்பிட்டு, அவர்கள் எப்போதாவது முஸ்லிம் சமூகத்திற்காக நீதிமன்ற வாசற்படிகளை மிதித்திருக்கிறார்களா..? பௌத்தசிங்கள தேரர்கள், அரசியல்வாதிகளின் ஊடகங்களின் தாக்குதலுக்கு என்னைப் போன்று உட்பட்டிருக்கிறார்களா என ஆத்திரப்பட்டார்.
முஸ்லிம்களுக்கு எதிராகவும், அந்த முஸ்லிம் சமூகத்தில் நானும் ஒரு அங்கம் என்ற வகையில் எனக்கு எதிராகவும் ஆதாரமற்ற குற்றம் சுமத்தும்போது நான் வாய்மூடி மௌனியாக இருப்பதா, இதற்காகவா எனக்கு அல்லாஹ் அரசியல் அதிகாரத்தை தந்துள்ளான் எனவும் கவலை தேய்ந்த குரலில் கேள்வியெழுப்பினார்.

'இறைவன் துணை நிற்பான்' என்ற ஆறுதல் வார்த்தையை அவருக்கு ஜப்னா முஸ்லிம் இணையத்தினால் கூறமுடிந்தது.
மேலும் தனக்கெதிராக மேற்கொள்ளப்படும் இந்த போலிப் பிரச்சாரங்களை சில முஸ்லிம்களும் நம்பிக்கொண்டு, பலவழிகளில் அவதூறு பரப்பி வருவதாகவும் றிசாத் பதீயுதீன் மனவேதனைப்பட்டார்.
அவரிடம் கூறுவதற்காக வைத்திருந்த சில ஆலோசனைகளையும் (ராஜித்த சேனாரத்தினாவின் கூற்றுக்கள்) ஜப்னா முஸ்லிம் இணையம் அவரிடம் தெரிவித்தது. சாகல தேரருடனான விவாதம் நடந்தபின்னர் அதுகுறித்து உடனடிக் கவனம் செலுத்துவதாகவும் றிசாத் பதியுதீன் கூறினார்.
இந்தக் குறிப்பை சாகல தேரர் றிசாத் பதியுதீன் விவாதத்திற்கு முன்னமே எழுத ஜப்னா முஸ்லிம் இணையம் திட்டமிட்டிருந்தது. எனினும் விவாதத்தின் பின்னரே இந்த குறிப்பை எழுதுவது சிறந்தது என கருதியமையால் இப்போது பகிரங்கப்படுத்துகிறோம்.
-Jaffnamuslim-

0 Comments