ஆசியாவின் பெரும் பகுதியை ஆட்சி செய்த மங்கோலிய தலைவன் செங்கிஸ் கானின் கல்லறை எங்கே உள்ளது என்பது பல நூறாண்டுகளாக மர்மமாகவே உள்ளது.
1227ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் திகதி, தனது 72 வயதில் செங்கிஸ் கான் சீனாவில் மரணமடைந்ததாக கூறப்படும் நிலையில், அவரது உடலை புதைத்த இடத்தினை ரகசியாகவே வைத்துள்ளனர்.
திடீர் உடல்நலக்குறைவால் இறந்த அவரது உடலை புதைக்க எடுத்து சென்ற போது, புதைக்கப்படும் இடம் யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்ற காரணத்துக்காக அந்த வழியில் இருந்தவர்கள், சென்றவர்கள் என அனைவரும் கொல்லப்பட்டுள்ளனர்.
சுமார் 800 போர் வீரர்கள் செங்கிஸ் கானின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற சுமார் 2,000க்கும் மேற்பட்டோரை கொன்று குவித்துள்ளனர்.
மேலும், அவரது உடலை கல்லறைக்கு எடுத்து சென்ற காவலாளிகளும் தங்களை தாங்களே வாளால் வெட்டிக்கொண்டு உயிரிழந்துள்ளனர்.
இவ்வளவு திட்டமிட்டு அவரது கல்லறை இருக்குமிடம் ரகசியமாக பாதுகாக்கப்பட்ட நிலையில், அறிவியல் அறிஞர்கள் மற்றும் வரலாற்று ஆசிரியர்கள் அந்த கல்லறையை தேடத் தொடங்கியுள்ளனர்.
வடக்கு மங்கோலியாவில் உள்ள Burkhan Khaldun என்ற மலையின் அருகே தான் அவரது உடல் புதைக்கப்பட்டதாக அறிஞர்கள் கருதியுள்ளனர்.
இதையடுத்து கடந்த 2004ம் ஆண்டு, ஜப்பானிய மற்றும் மங்கோலிய ஆய்வாளர்கள் அவரது கல்லறையை தேடும் பணியை துவங்கியுள்ளனர்.
மங்கோலிய தலைநகருக்கு கிழக்கில் 150 மைல் தூரத்தில் உள்ள Khentii என்ற மாகாண பகுதியில் அவர் புதைக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
விஞ்ஞானத்தின் உதவியுடன், செயற்கை கோள் மூலம் அந்த பகுதியில் சுமார் 84000 புகைப்படங்களை எடுத்து ஆராய்ந்துள்ளனர்.
மேலும், 2300 சதுர மைல் (6000 கி.மீ) பகுதியை 10,000-க்கும் மேற்பட்டோர் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தியுள்ளனர்.
இந்த தேடுதலில் குறிப்பிட்ட 55 தொல்பொருள் அடையாளங்களில் ஒன்றாக செங்கிஸ் கானின் கல்லறையாக இருக்கலாம் என்று கணித்துள்ளனர்.
ஆனால் இந்த 55 இடங்களில் பெரும்பாலானவை கோவில் போன்ற புனித இடங்களாக உள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், செயற்கை கோள் புகைப்படங்கள் மூலம் கண்டறிய பல இணையம் மூலம் பல தன்னார்வலர்கள் உதவியதாலேயே அந்த 55 இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் செங்கிஸ் கான் புதைக்கப்பட்ட சரியான இடத்தை கண்டறிவது இன்றுவரை அவ்வளவு சுலமாக இல்லை.
எனவே தெரிவு செய்யப்பட்ட இடங்கள் அனைத்தையும் சோதனை செய்ய முடியாத நிலை உள்ளதால், அவரது கல்லறை இவற்றில் தான் உள்ளதா அல்லது வேறு ஏதேனும் பகுதியில் ரகசியமாக உள்ளதா என்பதை நிரூபிக்க முடியவில்லை.
அறிவியல் மற்றும் தொழிநுட்பத்தின் உதவியுடன் வருங்காலத்தில் செங்கிஸ்கான் கல்லறை கண்டுபிடிக்கப்படலாம் என்பதை மட்டுமே தற்போது கூறமுடியும்.

0 Comments