தாய் ஒருவரின் உதவியுடன் நான்கு வயது சிறுமி 60 ஆயிரம் ரூபாவை கொள்ளையிட்ட சம்பவம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தென்பிராந்திய இங்கிரிய என்ற பகுதியில் உள்ள காலணி விற்பனையகத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சீசீடிவி கமரா மூலம் எடுக்கப்பட்ட படங்களின்படி குறித்த தாய், பணத்தை கொள்ளையிடுமாறு சிறுபிள்ளையை உற்சாகப்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் காலணி விற்பனையில் விற்பனை நிலைய உரிமையாளர் தீவிரமாக இருந்தபோது குறித்த சிறுமி, காசாளர் பெட்டியை திறந்து 60 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இது குறித்து அந்த தாயிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 Comments