சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை குறைந்துள்ள போதும் இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்படாது.
எனினும் சர்வதேச சந்தையின் மாற்றத்துக்கு ஏற்ப எரிபொருட்களின் விலைகளில் மாற்றங்களை கொண்டு வரும் வகையில் சூத்திரம் ஒன்று விரைவில் வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சூத்திரம், எதிர்வரும் ஜனவரி 6ஆம் திகதியன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்று பெற்றோலியத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
2014ஆம் ஆண்டுக்கு பின்னர் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை பீப்பாய் ஒன்று 85 டொலர்களில் இருந்து 37 டொலர்களாக குறைந்துள்ளது.
எனினும் ஜனவரி 21ஆம் திகதியன்று இந்த மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி ஏற்பட்டமைக்கான காரணம் என்ன என்பதை தெரிந்துகொள்ள முடியவில்லை என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலின் போது உறுதியளிக்கப்பட்டபடி எரிபொருட்களுக்கான விலை சூத்திரம் சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன்படி சர்வதேச சந்தையின் நிலைவரப்படி எரிபொருட்களின் விலைகளில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாற்றங்கள் மேற் கொள்ளப்படும் என்றும் அமைச்சர் குறிப் பிட்டுள்ளார்.


0 Comments