Subscribe Us

அடுத்த ஆண்டில் தரம் 1,7 மற்றும் 11 ஆகியனவற்றுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம்

எதிர்வரும் 2016ம் ஆண்டில் தரம் 1, தரம் 7 மற்றும் தரம் 11 ஆகியனவற்றுக்கு புதிய பாடத் திட்டமொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சமூகத்தின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு இந்த புதிய பாடத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

புதிய பாடத் திட்டத்தில் மூன்று தரங்களுக்குமான கற்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சுமார் 136 பாடப் புத்தகங்களை கல்வி வெளியிட்டுத் திணைக்களம் அச்சிட்டுள்ளது.

புதிய பாடத் திட்டத்தின் அடிப்படையிலான பாடப் புத்தகங்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் 4ம் திகதி நடைபெறவுள்ள பாடப் புத்தகங்களை வழங்கும் தேசிய நிகழ்வில் மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது.

கல்வி வெளியீட்டுத் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

Post a Comment

0 Comments