விடுமுறை தினங்களில் கதிர்காமத்துக்கு பெருந்தொகையானோர் விஜயம் செய்ததால் கதிர்காமம் மற்றும் அதையண்டிய பிரதேசங்களில் கடும் உணவுத்தட்டுப்பாடு நிலவியதாக யாத்திரிகர்கள் தெரிவிக்கின்றனர்.
உணவுக்கு மட்டுமின்றி தங்குமிடத்துக்கும் பெருந்தொகைப் பணத்தை செலவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.அப்பமொன்றின் விலை 40 ரூபாவாகவும் தேநீரொன்றின் விலை 100 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கதிர்காம புனித தலத்துக்கு தொடர்ந்து வந்த விடுமுறை தினங்களில் எதிர்பாராதளவுக்கு யாத்திரிகர்கள் வருகை தந்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கதிர்காமம் மற்றும் திஸ்ஸமாராம போன்ற நகரங்களில் உணவுப்பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவிக் கப்படுகின்றது.


0 Comments