நைஜீரியாவில் ஷியா பிரிவு இஸ்லாமியர்களுக்கும் அந்நாட்டு ராணுவத்திற்கும் இடையே ஏற்பட்ட கலவரத்தில் 1,000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களை சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய போகோ ஹாரம் என்ற தீவிரவாத அமைப்பு இயங்கி வருகிறது.
போகோ ஹாரம் தீவிரவாதிகள் ஷியா இஸ்லாமியர்கள் என்பதனால், அந்நாட்டில் உள்ள ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் ராணுவத்தின் தாக்குதலுக்கு அடிக்கடி உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமை ஆகிய இரு தினங்களில் சரியா என்ற நகரில் ஷியா இஸ்லாமியர்களுக்கும் ராணுவத்திற்கும் இடையே மோசமான கலவரம் வெடித்துள்ளது.
இந்த தாக்குதலில் சுமார் 1,000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களை ராணுவத்தினர் இரக்கமின்றி கொன்று குவித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், அரசு இதனை மறுத்துள்ளது. எனினும், உலகின் பார்வையில் இருந்து மறைக்க சரியா நகரில் கொல்லப்பட்ட இஸ்லாமியர்களை அரசு அதிகாரிகள் ரகசியமான இடங்களில் புதைத்து வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகியது.
இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், ராணுவ தளபதியை ஷியா இஸ்லாமியர்கள் கொல்ல திட்டம் தீட்டியதை தொடர்ந்து தான் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால், இந்த தாக்குதலில் 20க்கும் குறைவானவர்களே இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்ட இந்த வெறித்தனமான தாக்குதல் குறித்து நேர்மையான மற்றும் விரைவான விசாரணை நடத்த வேண்டும் என நைஜீரியாவில் உள்ள அமெரிக்க தூதரகமும், மனித உரிமைகள் அமைப்பும் வலியுறுத்தியுள்ளது.

0 Comments