கிமு 43 : ரோம அரசியல்வாதி மார்க்கஸ் டலியாஸ் சிசேரோ படுகொலை செய்யப்பட்டான்.
1724 : போலந்தின் டொரூன் என்ற இடத்தில் ஒன்பது புரட்டஸ்தாந்து மதத்தினருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்து அங்கு கலவரம் மூண்டது.
1787 : டெலவெயர் முதலாவது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவில் இணைந்தது.
1815 : நெப்போலியனுக்கு ஆதரவாக இருந்த பிரெஞ்சுத் தளபதி மிக்கேல் நேய் என்பவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
1900 : மாக்ஸ் பிளாங்க் தனது பேர்லின் இல்லத்தில் வைத்து புகழ்பெற்ற கரும்பொருள் வெளியேற்ற விதியைக் கண்டுபிடித்தார்.
1917 : முதலாம் உலகப் போர்: ஆஸ்திரியா-, ஹங்கேரி மீது ஐக்கிய அமெரிக்கா போரை அறிவித்தது.
1941 : இரண்டாம் உலகப் போர்: பின்லாந்து, ஹங்கேரி, போலந்து, ருமேனியா ஆகியவற்றுக்கு எதிராக கனடா போர்ப் பிரகடனம் செய்தது.
1941 : அமெரிக்காவின் ஹவாய் தீவிலுள்ள பேர்ள் துறைமுகத்தில் அமெரிக்க கடற்படை கப்பல்கள் மீது ஜப்பானிய படையினர் அதிரடி தாக்குதலை நடத்தினர்.
1946 : அமெரிக்காவின் ஜோர்ஜியாவின் அட்லாண்டாவில் உணவுவிடுதி ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 119 பேர் கொல்லப்பட்டனர்.
1949 : சீனக் குடியரசின் அரசு நான்கிங் நகரில் இருந்து தாய்வானுக்கு மாறியது.
1966 : துருக்கியில் இராணுவ முகாம் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 68 பேர் கொல்லப்பட்டனர்.
1971 : பாகிஸ்தானில் நூருல் அமீன் பிரதமராகவும் சுல்பிக்கார் அலி பூட்டோவை உதவிப் பிரதமராகவும் கொண்ட கூட்டணி அரசாங்கத்தை ஜனாதிபதி யஹ்யா கான் அறிவித்தார்.
1972 : அப்போலோ திட்டத்தின் கடைசி விண்கலம் "அப்போலோ 17" சந்திரனை நோக்கி ஏவப்பட்டது.
1975 : கிழக்குத் தீமோரை இந்தோனேஷியா முற்றுகையிட்டது.
1983 : ஸ்பெயின் மட்ரிட் நகரில் இரண்டு விமானங்கள் மோதியதில் 93 பேர் கொல்லப்பட்டனர்.
1987 : கலிபோர்னியாவில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவன், தனது முன்னாள் மேலதிகாரியையும் விமான ஓட்டியையும் சுட்டுக் கொன்றபின் தன்னைத் தானே சுட்டுக் கொன்றான். இதனால் விமானம் தரையில் மோதியதில் அதில் பயணம் செய்த 43 பேரும் கொல்லப்பட்டனர்.
1988 : ஆர்மீனியாவில் 6.9 ரிச்டர் அளவிலான பூகம்பத்தில் சுமார் 25,000 பேர் கொல்லப்பட்டு 3 லட்சம் பேர் காயமடைந்ததுடன் 400,000 பேர் வீடுகளை இழந்தனர்.
1988 : பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யாசர் அரபாத், இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரித்தார்.
1995 : கலிலியோ விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட்டு 6 ஆண்டுகளின் பின்னர் வியாழனை அடைந்தது.
2012 : பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மீதான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்டிருந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிலிருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விலகினர்.


0 Comments