ஜேமி லூயிஸ், டெனின் டேவைன்ஸ் தம்பதி ஆட்டிசம் குறைபாடுள்ள தமது மகன் மேசனுக்கு முடிதிருத்துவதற்கு வழி தெரியாமல் சில காலமாக தவித்து வந்தனர். சில மாதங்களுக்கு முன்பு மேசனுக்கு ஆட்டிசம் மற்றும் சென்சரி ஓவர்லோடு போன்ற பிரச்சனைகள் இருப்பது தெரியவந்தது.
இதனால், மேசனுக்கு முடிதிருத்த அவனது தலைமீது கைவைத்தாலே, அவனது உடலில் பயங்கரமான வலி ஏற்படுவதாய் உணர்கின்றான். இந்த பிரச்சனையால் மகனுக்கு முடிதிருத்த ஆள் கிடைக்காமல்போனது.
இறுதியாக, ஜேம்ஸ் வில்லியம்ஸ் என்ற சிகை அலங்கார கலைஞர் மேசனுக்கு முடி திருத்துவாக ஒப்புக்கொண்டார். ஆனால், மேசனோ.., ஜேம்ஸை தனது தலையைத் தொடவே விடவில்லை. முடிதிருத்தும் நிலையத்தின் இருக்கையிலும் அமரவேயில்லை.
நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் மேசன் விளையாடிக்கொண்டிருந்தபோது ஜேம்ஸ் அவன் இருக்கும் வாட்டத்திலேயே தானும் படுத்து, புரண்டு அவனது முடியைத் திருத்தினார்.
இதனால், இந்தப் பொறுமைசாலி சிகை அலங்கார கலைஞர், மேசனின் பெற்றோருக்கு மிகவும் பிடித்த நபராக மாறியுள்ளார்.
0 Comments