இஸ்லாம் இஸ்லாம்
இனிய இஸ்லாம்
இனிக்கும் இஸ்லாம்
வாங்கி போங்க
வாழ்ந்து பாருங்க
வருத்தமெல்லாம் நீக்கும்
வாலிபத்த பெருக்கும்
கூவி விற்றான்
கூடை வியாபாரி
கூவல் கேட்டு
குறை நிறை பார்த்து
தெரிவு செய்ய
கூடி நின்றது நிபுணர் கூட்டம்
என்ன விலை தம்பி?
சும்மா தாரேன்
எடுத்து போங்க
எடுத்து விட்டான் வியாபாரி
கை படாதது
காலாவதி ஆகாதது
புத்தம் புதியது
யாருமே பாவிக்காதது
பாவிச்சி பாருங்க
பழசின்னா திருப்பித் தாங்க
பழகிட்டா விட மாட்டீங்க
மக்களுக்கோ திருப்தியில்லை
மனம் நிறைய சந்தேகம்
இவனை நம்பலாமா
இப்படித்தான் சீசனுக்கு சீசன்
புதுசு புதுசா வருகுது
வாங்கி போய்
பிரிச்சி பார்த்தா
ஒரு துண்டு இருக்குது
ஒரு துண்டு இல்ல
இவன பார்த்தா
இஸ்லாம் விற்பவன் போலில்லையே
தாடியுமில்ல தொப்பியுமில்ல
கணுக்காலுக்கு கீழே களிசான் வழியுது
வார்த்தைல மட்டும் இஸ்லாம் தெரியுது
தோற்றத்தை வைத்து
வாங்க மறுத்தது ஒரு கூட்டம்
சத்தம் போடுமா
சகவாழ்வ பேசுமா
சர்வதேச பிரச்சினைகளை
கட்டுக் கட்டா பேசுமா
கட்டுரையிலும் கவிதையிலும்
கலீபாக் கதை சொல்லுமா
கண்டிசன் போட்டது
ஒரு கூட்டம்
நாட்டுல செஞ்சதா
வெளிநாட்டு சரக்கா
மக்ரிப் ஆகினா
சாம்பிராணி சந்தனக்குச்சி பத்துமா
சஹ்ருக்கும் இப்தாருக்கும்
கலியாவோட இறைச்சி கஞ்சி ஊத்துமா
பள்ளிக்குள்ள குசுனி கட்டி
படுத்தெழும்ப விடுமா
மாசத்துல மூனு நாள்
முழுசா பத்துமா
கேட்டுப் பார்த்தது
ஒரு கூட்டம்
எப்படி விக்கிறது
எத சொல்லி விக்கிறது
வியாபாரிக்கு புரியல
வீடு வீடா விற்போமா
வீதியிலே விற்போமா
மேடை போட்டு விற்போமா
மெகசின் அடிச்சி விற்போமா
விதம் விதமா யோசிச்சான்
விற்க வந்த வியாபாரி
சேதி கேட்டு தேடி வந்தது
இன்னொரு கூட்டம்
நீங்க விற்கும் இஸ்லாம் பற்றி
கொஞ்சம் தெரியனும்
கேட்ட கேள்விக்கு
பதில் சொல்லனும்
கேட்டுக் கொண்டது
வந்த கூட்டம்
முக்கா மொழ தாடி வைக்கவும்
முழங்காலுக்கு கீழால் ஜுப்பா அணியவும்
ஆதாரம் சொல்லுமா
உங்க இஸ்லாம்
நில்லுனா நிக்கனும்
இருன்னா இருக்கனும்
எல்லா பித்அத்தையும் எட்டி உதைக்கணும்
எள்ளளவும் எட்ஜஸ்மன்ட் ஏலாது
ஒத்து வருமா ஒங்க இஸ்லாம்
வேணும்னா வாங்க
வாதிச்சு தெரிஞ்சுக்கலாம்
கேட்டு நின்றது
வந்த கூட்டம்
லிஸ்டு போட்டு பேசினாரு
வயசாலி ஒருத்தர்
கத்தம் பாத்திஹா கந்தூரி சாப்பாடு
நூறு மசாலா ராத்திபு மஜ்லிஸ்
மாசத்துல பத்து நாள்
சாப்பாடு போடனும்
வருசத்துல ரெண்டு மொற
கோயா தங்கல பாக்கனும்
நாகூர் ஆண்டகைக்கு
நாளும் துவா கேக்கனும்
ஜெய்லானி பள்ளிக்கு
நேத்தி வக்கனும்
டம்டா மரத்தடி பள்ளீல
நெய் வெளக்கேத்தனும்
எல்லாம் மொறப்படி செய்யுமா தம்பி
வாங்கினா ஒங்கட இசுலாம்
பல்ல இலிச்சாரு பச்ச தலப்பா
திடீர்னு கூட்டம் விலகியது
நாற்பது பேர் சூழ
நாலு பேர் வந்தாங்க
நல்ல சேட்டு சூட்டு போட்டு
பூட்டு காலால
தட்டி தட்டி வந்தாங்க
வியாபாரிக்கு கொஞ்சம்
நடுக்கம் பிடிச்சிட்டு
நடுவுல வந்தவரு
நல்லமா தம்பி எப்படி சுகம்
சாட்டுக்கு கேட்டுட்டு
சம்பாஷணைய தொடங்கினாறு
நாங்க தான் நவ கட்சித் தலைவர்கள்
நீங்க விக்கிற இஸ்லாம்
ஸ்டேண்டர்ட் எப்படி
எல்லோருக்கும் கட்டுப்படியாகும்
விலைல கொடுக்குறீங்களா
சிரிச்சுகிட்டே கேட்டாறு
உங்கட இஸ்லாம்
எல்லோருக்கும் பொருந்தனும்
கோவில்ல கும்பிடனும்
சாது கிட்டே சரியனும்
கோபத்துல சிரிக்கணும்
இலக்சன்ல வெல்லனும்
சபைல பேசனும்
சாட்டுகள சொல்லனும்
அரசாங்கத்த சாடனும்
அமைச்சுகள கேட்கனும்
அடிச்சா ஓடனும்
அவசரத்துல ஒளியனும்
சிரிச்சிகிட்டே வந்தவரு
சீரியசா கேட்டாறு
கூட்டத்தை கிழித்துக்கொண்டு
கூக்குரலொன்று கேட்டது
யாரப்பா அங்கே
எங்ககிட்ட கேக்காம
இஸ்லாத்த விக்கிறது
ஆஜானுபாகுவாய் ஆறேழு பேர்
வாய்களுக்கு முன்னால
வயிறுகள் நடந்து வந்தன
பேர்மிஷன் கேட்டுட்டா
விக்க வந்தீங்க
வந்தவங்க கேட்டாங்க
கூட்டமெல்லாம் ஒதுங்கி
கும்பிடாத குறையா மரியாதை செய்தார்கள்
கிசுகிசுன்னு ஒருத்தர்
காதுல ஊதினாறு
இவங்கதான் ஆலிம் சாகிப்கள்
ஏரியாவையே ஷேக் பண்ணும் ஷேக்குமார்கள்
எதுவாயிருந்தாலும் எழுதிக் கேட்கனும்
பத்து மாசத்துல பட்டுன்னு
பதில் தருவாங்க
அடடே கேக்காம வந்துட்டோமோ
யோசிச்சாரு வியாபாரி
பேர்மிஷன் கேட்குறது எப்படின்னு
ஆலிம்களிடமே கேட்டாறு
ஷேக்குகளில் ஒருவர் சொன்னார்
கேக்க தேவையில்ல
மற்ற ஷேக் சொன்னார்
இவர் எங்க ஜமாத்தில்லையே
மூன்றாம் ஷேக் சொன்னார்
இவரு செய்யிறது பித்அத்து
வந்த கூட்டத்துக்குல்லையே வாய் தர்க்கம் வர
இடத்தை விட்டகன்று
மூச்சிரைக்க ஓடினார்
இஸ்லாம் விற்க வந்தவர்
கூடை நிறைய இஸ்லாம்
ஒன்று கூட விற்கலயே
ஒருத்தர் கூட வாங்கலயே
கவலையோடு கால் கடுக்க
கூவிக் கூவிச் சென்றார்
கூடை வியாபாரி
அரை வழியில்
அங்கோர் மூதாட்டி
மூடி முக்காடிட்டு
முழுசா மறைத்து
கம்பாயம் உடுத்திருந்தாள்
அவளருகில் சென்று
இஸ்லாம் வாங்குங்களேன் மூத்தம்மா
பரிவோடு கேட்டார் வியாபாரி
முகத்தை மூடி
ஒற்றைக்கண்ணால் பதிலிறுத்தாள் மூத்தம்மா
என்னிடம் நிறையவே உள்ளது
வேண்டுமென்றால்
என் கணவரிடம் பெற்றுக்கொள்
என்று கூறி தாழிட்டாள் கதவை
- இம்தாத் பசர் -
0 Comments