Subscribe Us

header ads

பொலன்னறுவையில் முஸ்லிம் மீடியா போரம் நடத்தும் ஊடகக் கருத்தரங்கு

பொலன்னறுவை மாவட்டத்தில் ஊடகவியலாளர்களை உருவாக்குவதற்காக ஊடகப் பயிற்சிநெறியொன்றை ஆரம்பிப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இம்மாவட்டத்தில் தமிழ் மொழி மூலம் பணிபுரிய ஊடகவியலாளர்கள் இல்லாததனைக் கருத்திற்கொண்டு, பொலன்னறுவை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளுடன் இணைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் இப்பயிற்சியை நடத்தவுள்ளது. இதன் முதற்கட்டமாக ஒரு நாள் பயிற்சி முகாம் எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி கதுருவெல முஸ்லிம் மத்திய கல்லூரியில் நடத்தப்படவுள்ளது.

இதில் பங்குபற்ற விரும்பும் பாடசாலைக் கல்வியை முடிந்தவர்கள் மற்றும் ஊடகவியலாளராக வர விரும்புவோர் 0773463585 எனும் தொலைபேசி இலக்கத்தின் ஊடாக வட மத்திய மாகாண முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனப் பணிப்பாளர் ஐ.எல்.எம்.தௌபீகினை தொடர்புகொள்ளுமாறு கேட்கப்படுகின்றனர்.

இதேவேளை, எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி சனிக்கிழமை பொலன்னறுவை மாவட்ட பாடசாலைகளின் உயர் வகுப்பு மாணவர்களுக்காக 21ஆம் நூற்றாண்டில் ஊடகம் என்ற தலைப்பில் மாணவர்களுக்கான ஊடகக் கருத்தரங்கு ஒன்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தினால் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-Srilanka Muslim Media Forum-


Post a Comment

0 Comments