குழந்தைகளின் விருப்பமான ‘ட்ரன்க்கி’ பெட்டிகளை வடிவமைத்த ராப் லா, இளம் வயதினரின் பயணங்களில் அவர்களது தேவைக்கேற்ப பயன்படும் பெட்டிகளை தற்போது வடிவமைத்துள்ளார்.
பல்வேறு வண்ணங்களில் விலங்குகளின் படங்கள் மற்றும் சக்கரம் கொண்ட குழந்தைகளின் ‘ட்ரன்க்கி’ பெட்டிகளுக்கு ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், இளைஞர்களின் பயன்பாட்டுக்கு ஏற்ப பெட்டியை தயாரிக்க ராப் லா முடிவு செய்தார்.
லேசான அதேவேளையில் உடையாத வகையில் உள்ள பிளாஸ்டிக் கொண்டு தேவைக்கேற்ப பாகம் பிரித்துக்கொள்ளும் வகையில் இந்த பெட்டி தயாராகியுள்ளது.
இளம் தலைமுறையினருக்காக தயாரிக்கப்பட்டுள்ள ‘ஜர்னி’ பெட்டியின் முழுமையான பயன்பாட்டை தெரிந்துகொள்ள சமீபத்தில் யூடியூபில் வெளியான இந்த வீடியோ தொகுப்பைப் பார்க்கவும்.
0 Comments