Subscribe Us

header ads

தற்போது செய்யும் வேலை பிடிக்கவில்லையா?: நாசாவில் விண்வெளி வீரர்களாக விண்ணப்பிக்கலாம்...


ஒவ்வொரு நாளும் காலை 9 மணி முதல் 5 மணி வரை வேலை செய்வது சலித்துவிட்டதா? உங்களது சி.வி.-க்களை தூசி தட்ட வேண்டிய நேரமிது. விண்வெளி வீரர்களை வருங்கால பணித்திட்டங்களுக்காக தேடும் முயற்சியில் அமெரிக்க விண்வெளி மையமான நாசா களமிறங்கியுள்ளது.

இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் முதல் இந்த வேலைவாய்ப்புகள் தொடங்குகின்றது. அதிலும், கணிதம், இயற்பியல், உயிரியல் மற்றும் பொறியியல் பாடத்திட்டங்களில் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தால் இன்னும் பிரகாசமான வாய்ப்பு உள்ளது. 

விஷயம் என்னவென்றால், உங்களுக்கு ஆயிரம் மணி நேரங்களுக்கு ஜெட் விமானியாக இருந்த அனுபவம், நாசாவின் இந்த கனவு வேலையில் நீங்கள் சேர்வதற்கான வாய்ப்பை வழங்கும்.

நிர்வாகப் பணியில் மூன்றாண்டு வரை அனுபவம் உள்ளவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். நாசாவில் விண்வெளி வீரராக நியமிக்கப்பட, விண்ணப்பதாரர்கள் நடுத்தர உயரத்துடன், சிறப்பான கண்பார்வை மற்றும் ரத்த அழுத்தம் கொண்ட நல்ல உடல் நலத்துடன் இருக்க வேண்டும்.

நாசாவின் விண்வெளி வீரர்களாக வரும் டிசம்பர் மாதம் 14-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். இந்தப் பணியில் தேர்வாகும் விண்ணப்பதாரர்களைப் பற்றிய விவரங்கள் வரும் 2017-ம் ஆண்டின் மத்தியில் வெளியிடப்படும் என நாசா அறிவித்துள்ளது. மேற்படி, பணி வாய்ப்பு தொடர்பான விவரங்களுக்கு நாசாவின் இணையதளத்தை விசிட் செய்யவும்.

Post a Comment

0 Comments