ஹை ஹீல்ஸ் போடும் பெண்களால் சரியாக நடக்க முடியாது என்பது போலவே அமைக்கப்பட்டிருக்கும் தமிழ்சினிமா காட்சிகளும், கேலி கிண்டல் ஜோக்குகளும் ஃபெயித்திடம் எடுபடாது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த திகில் சாகச விரும்பிதான் ஃபெயித் டிக்கி(26). நிறைய சாகசங்களை செய்து போரடித்ததால் அண்மையில் Highgirls Brazil Festival இல் கலந்து கொண்டார். 2755 அடி உயரத்தில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள ஹைலைனில்(கயிற்றால் இணைக்கப்பட்டிருக்கும் வழி) ஹை ஹீல்ஸ் அணிந்த காலுடன் நடந்தார்.
கழுத்து வலியையும் பொருட்படுத்தாமல் பிரேசில் மக்கள் ஃபெயித்தை வெகு நேரமாக அண்ணாந்தே பார்த்துக் கொண்டிருந்தார்கள். வெறும் காலுடனே நடக்க தடுமாறும் இந்த இடத்தை ஹை ஹீல்ஸ் காலுடன் கடப்பதென்றால் சும்மாவா...
0 Comments