Subscribe Us

header ads

ஏன் சீன மொழி கற்றுக்கொண்டேன் - பேஸ்புக் நிறுவனரின் மார்க் ஸ்க்கர்பெர்க்ரின் காதல் பக்கம்..(VIDEO)

சீனாவில் உள்ள சிங்குவா பல்கலைக்கழகத்தில் பொருளியல் மற்றும் மேலாண்மை துறையின் ஆலோசகரக உள்ளார் பேஸ்புக் நிறுவனரின் மார்க் ஸ்க்கர்பெர்க். 

கடந்த 24-ம் தேதி சிங்குவா பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் மத்தியில் 22 நிமிடங்கள் பேசினார். அதுவும் முழுவதும் சீனாவில் பேசப்படும் மாண்டரின் மொழியில். இந்த உரையின் போது தான் சீன மொழி கற்றுக்கொண்டதற்கான மூன்று விஷயங்களை பட்டியலிட்டார். அவை...

”முதல் காரணம் சீனாவை சேர்ந்த என்னுடைய மனைவி பிரிசில்லா. பிரிசில்லாவின் பாட்டிக்கு மாண்டரின் மொழி மட்டும் தான் தெரியும், எனவே உங்கள் பேத்தியை திருமணம் செய்து கொள்போகிறேன் என்று மாண்டரின் மொழியில் தான் அவரிடம் சொன்னேன். அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

இரண்டாவது காரணம் சீன பண்பாடு, மூன்றாவது காரணம் மாண்டரின் என்ற ஒரு கடினமான மொழி. எனக்கு சவாலன விஷயங்களை செய்யபிடிக்கும்” என்று மார்க் ஸ்க்கர்பெர்க் தெரிவித்தார்.

மேலும் அவர் சீனாவில் தான் பேசிய வீடியோவையும் (ஆங்கில ஷப்டைட்டிலுடன்), அங்கு எடுத்த சில புகைப்படங்களையும் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். 

Post a Comment

0 Comments