Subscribe Us

header ads

மற்றுமொரு மோசடி செய்தி!

"அமெரிக்காவில் 2 சூரியன் உதித்துள்ளது, இது கியாம நாளின் அடையாளமாகும்" என்று ஒரு போலியான செய்தி கடந்த சில நாட்களாக பேஸ்புக் மற்றும் வட்ஸப் ஊடாக பரப்ப படுகிறது.

இது முற்றிலும் பொய்யான, மோசடியான செய்தி. யாரோ ஒரு "கிறுக்கன்" பண்ணிய காரியத்தை நம்மவர்கள் கண்ணை மூடிக்கொண்டு "சுபஹானல்லாஹ்" சொல்லி பெரியதொரு மறுமையின் அடையாளம் போன்று பரப்பி கொண்டிருக்கிறார்கள்.

பலகண்ணாகளில் பட்டு விம்பமாக தெறிக்கும் காட்சியை 2 சூரியனாக காண்பித்து வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இது நமது இறைநம்பிக்கைக்கும் மார்க்கத்திற்கும் இழுக்கை ஏற்படுத்தும் காரியமாகும்.
சூதிரியன் மேற்கிலிருந்து உதிப்பதுதான் மறுமை நாளின் அடையாளம்.

2 சூரியன் உதிக்குமென்று எந்தவொரு வேதத்திலுமில்லை. குரானிலும் இல்லை, ஹதீஸ்களிலும் இல்லை.

இப்படியான போலியான, மார்க்க முரணான செய்திகளை பரப்புவதை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்.

பொய்யை பரப்புவது அல்லாஹ்வின் சாபத்தை பெற்று தரக்கூடிய பாவமான தீய செயலாகும்.

-அல்மஷூறா நியூஸ்

Post a Comment

0 Comments