Subscribe Us

header ads

குடல் புற்றுநோயை ஏற்படுத்தும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்: எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்

பதப்படுத்தப்பட்ட மற்றும் சுவை கூட்டப்பட்ட இறைச்சி புற்றுநோயை ஏற்படுத்துகிறது என புற்றுநோய் குறித்து ஆய்வு நடத்தி வரும் சர்வதேச புற்றுநோய் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் புற்றுநோய் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் அமைப்பான IARC சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்று புலால் பிரியர்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.

இது தொடர்பாக 800-க்கும் அதிகமான ஆய்வுகளை நடத்தியுள்ள இந்த அமைப்பு பதப்படுத்தப்பட்ட இறைச்சி உண்பதால் எப்படி புற்றுநோய் பாதிப்பு உருவாகிறது எனவும் கண்டுபிடித்துள்ளது.

பதப்படுத்தப்பட்ட அல்லது சுவை கூட்டப்பட்ட இறைச்சிகளை அதிகமாக விரும்பி உண்பவர்களுக்கு குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 17 சதவிகிதம் அதிகமென அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரித்தானியாவில் இறைச்சி உண்ணும் 1000 நபர்களில் 61 பேருக்கு குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிவித்துள்ள அந்த அமைப்பு,

இறைச்சி வகைகளை குறைவாக எடுத்துக்கொள்பவர்களில் 56 பேருக்கும் குடல் புற்றுநோய் வரலாம் என தெரிவித்துள்ளது.

பிரித்தானியர்கள் தினசரி எடுத்துக்கொள்ளும் உணவில் ஒட்டுமொத்தமாக 285 கிராம் அளவில் இறைச்சி இடம்பெறுவதாக குறிப்பிட்டுள்ள ஆய்வறிக்கை,

அதை 70 கிராமாக குறைத்து வந்தால் குடல் புற்றுநோயில் இருந்து தப்பிக்க வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Post a Comment

0 Comments