முள்ளுசீதா எல்லாவகை மண்ணிலும் வளரக்கூடியது. இது ஒரு சிறிய பழம்தரும் மரம். இது சீதா வகையைச் சேர்ந்தது. முள்ளுசீதா சுமார் 20 – 30 அடி உயரம் வளரக் கூடியது. அதிகமான கிளைகளைக் கொண்டது. இதன் தாயகம் CARIBBEAN மற்றும் மத்திய அமரிக்கா. இதன் வெப்ப தட்ப நாடுகளில் உலகம் முழுதும் பரவலாயிற்று. தமிழகமெங்கும் தோட்டங்களிலும் வேலிகளிலும் ஆற்றுப் படுகைகளிலும் காணப்படும்.
இதன் இலைகள் கிளைகளில் எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். நீளவாக்கில் கொய்யா இலை போன்று நீள்வட்ட வடிவத்தில் காணப்படும். இலைகள் 8 – 16 சென்ரிமீட்டர் நீளம் இருக்கும். அகலம் 3 -7 செண்டி மீட்டர் இருக்கும். இது கரும்பச்சை நிறத்தில் இருக்கும். இதன் பூக்கள் இலைக்கு எதிர் பக்கத்தில் காம்புப் பகுதியில் பூக்கும். ஒன்று அல்லது இரு பூக்கள் பூக்கும். பூ இதழ்கள் கெட்டியாக இருக்கும். சிறுமுடி இருக்கும் (15 mm) மஞ்சள் நிறத்தில் காணப்படும். இதழ்கள் இதய வடிவில் இருக்கும். இதன் சூழ் முடிகளால் சிகப்பாக சூழ்ந்திருக்கும். காய்கள் பச்சையாக சிறுசிறு முள் நுனிகளுடன் நீள்வட்ட வடிவில் பெரிதாக இருக்கும்- சுமார் 30 சென்ரிமீட்டர் அளவு இருக்கும். உள் பாகத்தில் விதைகளுடன் வெண்மையான சுவை, மணம் உள்ள சதைப்பற்றுடன் இருக்கும். விதைகள் சுமார் 470 கிராம் எடை இருக்கும். மூன்று நாட்கள் காய வைத்தால் 322 கிராம் எடையாகக் குறையும். இதன் பழம் உண்ணக்கூடியது. சிறிது இனிப்பும், துவர்ப்பும் கலந்து அன்னாசிப்பழம் போன்று இதன் சதைப்பகுதிகள் சுவை இருக்கும். இந்தப் பழத்தில் ஒரு அமிலத்தன்மை ஏற்படும். அதனால் இதை SOURSOP என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.
முள்ளுசீதாப் பழங்கள் தற்போது ஊட்டி செல்லும் வழியில் பரலியாற்றிலும், கொடைக்கானலிலும் கிடைக்கிறது. கிராமங்களில் இதை இராம் சீத்தா என்று அழைக்கிறார்கள். ஆய்வுக்குரியது. காய்ந்த பதப்படுத்திய விதையிலிருந்து விதைத்து நாற்றுக்கள் உற்பத்தி செய்து இன விருத்தி செய்யப்படுகிறது.
முள்ளு சீதாபழம்--மருத்துவப் பயன்கள்
முள்ளுசீதா மரம் அமேசன் காடுகளில் வளர்ந்தபோது இதன் பட்டை, இலை, பழம், வேர் எல்லாவற்றையும் அங்குள்ள பழங்குடி மக்கள் நோய் தீர்க்கும் மருந்துகளாகப் பயன்படுத்தி குணம் கண்டனர். முக்கியமாக இதன் இலை,பழம் இவைகளை பக்குவப்படுத்தி உணவாக அருந்தும் வகையில் தயார் செய்து புற்றுநோயைக் குணப்படுத்தப் பயன்படுத்தினார்கள்.
அமரிக்காவில் இதை ஆய்வுசெய்து புதிய கலங்களை உற்பத்தி செய்து கெட்ட நோய் கலங்களை அழித்து நல்ல பலன் கிடைப்பதைக் கண்டு பிடித்தார்கள். மேலும் அதில் பக்கவிளைவுகள் இல்லையென்பதையும் கண்டறிந்தார்கள். ‘கிமோதெரப்பி’ என்னும் சிகிச்சையில் முடி கொட்டி விடுகிறது மற்றும் உடல் மெலிந்து எடை குறைந்து விடுகிறது. ஆனால் இயற்கையான முள்சீதாவில் அதைவிட புற்றுநோய் கலங்களைக் கொல்வதில் 10,000 மடங்கு சக்தி வாய்ந்தது. அதனால் முடி உதிர்வதில்லை, எடையும் குறைவதில்லை.
இதன் இலைகள் மருத்துவ குணம் இருப்பதால் காயவைத்துப் பதப்படுத்தி தேனீர் போன்ற பானமாக மேல்நாட்டில் அருந்துகிறார்கள். இதை வியாபார நோக்குடன் சில கம்பனிகள் செய்து வருகின்றன.
முள்ளுசீதா 12 வகையான புற்றுநோய்களைக் குணப்படுத்த வல்லது என்று கண்டு பிடித்தார்கள். மேலை நாடுகளில் பலநாடுகள் இதன் மருத்துவ குணம் நன்கு அறிந்து பலவிதமான நோய்களைக் குணப்படுத்தினர். அவை புற்றுநோய் கட்டிகள், கல்லீரல், மண்ணீரல், நுரையீரல் கர்ப்பப்பையில் புற்றுநோய்கள் மார்பகப்புற்று நோய் அகியவற்றைக் குணப்படுத்தினர். இரத்த அழுத்தம், குறைவு, அதிகரிப்பு இவைகளையும் குணப்படுத்தினர். மேலும் ஆஸ்மா, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், புண், குடல் புண், புளுகாய்ச்சல், ஈரல் பாதிப்பு, தோல் வியாதிகள், நரம்பு தளர்ச்சி, நடுக்கம், பதட்டம், இருதயக்கோளாறு, சிறுநீரகப் பாதிப்பு, இருமல், வயிற்றுவலி போன்ற நோய்களையும் இதன் மூலம் குணப்படுத்தினர். மருந்து உண்ணும் அளவு மருத்துவரின் ஆலோசனைப்படி உட்கொள்ள வேண்டும். அதுவும் 30 நாட்களுக்கு மேல் மிகாமல். அதிகமாக உட்கொண்டால் வாந்தியை உண்டு பண்ணி பக்க விளைவுகள் ஏற்படலாம். கற்பிணிப் பெண்கள் இதைத் தவிர்க்க வேண்டும்.
இப்போதைய உணவுப் பழக்கம், அளவுக்கு மீறிய இரசாயன மருந்து மற்றும் உரங்கள் ஆகியவை புற்றுநோய்க்கு வழிவகுக்கின்றன. இதனை குறைப்பதற்கு மாற்று மருத்துவத்தில் வழி உண்டு என்பதை பரம்பரை ஞானமும் விஞ்ஞானமும் சொல்கிறது. எடுத்துக் கொள்வதும் விட்டுவிடுவதும் அவரவர் கையில் உள்ளது!

0 Comments