Subscribe Us

லக்கானின் இரத்ததான முகாம்

கிழக்கின் முன்னணி விளையாட்டுக்கழகமான நிந்தவூர்  லக்கான் விளையாட்டுக்கழகம்  ஏற்பாடு செய்த வருடாந்த  இரத்ததான முகாம் இன்று (25.10.2015) ஞாயிற்றுக்கிழமை நிந்தவூர் கமு/அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இடம் பெற்றறு.  

இன் நிகழ்விற்கு  சுகாதாரப் பிரதி அமைச்சர்  கௌரவ  பைசால் காசீம் அவர்கள்  பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்.அத்தோடு  நிந்தவூர் தள வைத்தியசாலை  மற்றும் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலை வைத்தியர்கள்ஊழியர்கள்,  லகான் விளையாட்டுக்கழக  நிர்வாகிகள் மற்றும் கழக அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையுடன் இனைந்து நடாத்தப்பட்ட இன்நிகழ்வி சுமார் 100க்கு மேற்பட்ட இளைஞர் யுவததிகள் இரத்த தானம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.இதில் உரையாற்றிய சுகாதாரப் பிரதி அமைச்சர்  கௌரவ  பைசால் காசீம் அவர்கள் “ஒரு மாத காலத்தினுள் நிந்தவூர் தள வைத்திய சாலைக்கு விஷேட வைத்திய நிபுணர்கள் நியமிக்கப்படுவர்.அத்தோடு  ஒரு வருட காலத்திற்குள் இரத்த வங்கி பிரிவும் ஆரம்பிக்கப்படும்.” எனவும் கூறியமை குறிப்பிடத்தக்கது.

(முர்சித் அனிபா)


Post a Comment

0 Comments