புனித ஹஜ் கட­மைக்­காக சென்ற வேளையில் மினாவில் ஏற்­பட்ட அனர்த்­தத்தைத் தொடர்ந்து காணாமல் போன இலங்­கையைச் சேர்ந்த இரு­வரில் ஒருவர் உயி­ரி­ழந்­துள்­ளமை உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.
இச் சம்­ப­வத்தில் கொழும்பைச் சேர்ந்த கண­வனும் மனை­வியும் காணாமல் போயி­ருந்த நிலையில் தொடர்ச்­சி­யாக இலங்கை அதி­கா­ரிகள் தேடுதல் பணி­களை முன்­னெ­டுத்து வந்­தனர்.

இந் நிலையில் அபூ­பக்கர் அப்துல் அஸீஸ் (வயது 57) என்­ப­வ­ரது ஜனாஸா அவ­ரது உற­வி­னர்­களால் நேற்­றைய தினம் அடை­யாளம் காணப்­பட்­டுள்­ள­தாக ரியாத்­தி­லுள்ள சவூதி அரே­பிய தூத­ரகத்தால் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரி­வித்தார். எனினும் இவ­ரது மனை­வியின் நிலை தொடர்பில் எந்­த­வித தக­வல்­களும் கிடைக்கப் பெறவில்லை என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.