Subscribe Us

header ads

பாடசாலையில் ஆசிரியர்களின் குற்றச்சாட்டுக்கு இலக்கான மாணவன் தற்கொலை செய்துகொண்ட பரிதாபம்

பாடசாலை மின்சார சுவிச்சுகளை சேதப்படுத்தியதாக ஆசிரியர்களால் குற்றம் சாட்டப்பட்ட 11 வயது மாணவனொருவன் தற்கொலை செய்துகொண்டுள்ளான்.

நுவரெலியா மாவட்டத்தின் சாந்திபுர பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

சாந்திபுர பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்று வந்த சானக்க கல்ஹார எனும் மாணவன் பாடசாலை மின்சார சுவிச்சுகளை சேதப்படுத்தியதாக ஆசிரியர்களால் கண்டிக்கப்பட்டுள்ளான்.

அத்துடன் இன்று செவ்வாய்க்கிழமை தனது பெற்றோரையும் பாடசாலைக்கு அழைத்து வருமாறும் ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை இது தொடர்பில் கடிதமொன்றை எழுதி வைத்துவிட்டு குறித்த மாணவன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளான்.

சம்பவம் தொடர்பாக நுவரெலியா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Post a Comment

0 Comments