Subscribe Us

header ads

முதலமைச்சரின் நிதியில் இருந்து நன்னீர் மீனவர்களுக்கு மீன்பிடி வலைகள் வழங்கிவைப்பு

-CM MEDIA-


கிழக்கு மாகாண முதலமைச்சரின் நிதியில் இருந்து நன்னீர் மீனவர்களுக்கான மீன்பிடி வலைகள் வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று (18) காலை ஏறாவூர் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா தலைமையில் பிரதேச செயலக கட்டிடத்தில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதின் நிதி ஒதுக்கீட்டில் மூலம் இன்று காலை நன்னீர் மீனவர்களுக்கான பீன்பிடி வலைகள் அவழங்கிவைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு அவர்களுக்கான வலைகளை வழங்கிவைத்ததன் பின்னர்  மீனவர்களின் தேவைகளைக் கேட்டறிந்து அவர்களின் தேவைகளை இன்னும் இரண்டு மாதத்திற்குள் நிறைவு செய்து தருவதாகவும் உத்தரவளித்தார்.

குறிப்பிட்ட நிகழ்வில் அமைச்சின் காரியாலய உத்தியோகத்தர்கள் அதிகாரிகள் மற்றும் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.






Post a Comment

0 Comments