Subscribe Us

header ads

வெஜிடபிள் உருண்டை




தேவையான பொருட்கள்: 

அரிசி - 2 கப், 
கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி - தலா ஒரு கப், 
வெங்காயம் - 1, 
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, 
தேங்காய் துருவல் - கால் கப், 
காய்ந்த மிளகாய் - 3, 
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, 
கடுகு - அரை டீஸ்பூன், 
உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு ஸ்பூன், 
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், 
உப்பு - தேவையான அளவு. 

செய்முறை: 

• அரிசியை மிக்ஸியில் ரவை போல உடைத்து வைக்கவும். 

• வெங்காயம், கொத்தமல்லி, கேரட், பீன்சை பொடியாக நறுக்கி வைக்கவும். 

• கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளித்து... பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். 

• பிறகு, கேரட், பீன்ஸ் சேர்த்து, பச்சைப் பட்டாணியையும் சேர்த்து வதக்கி, ஒரு கப் அரிசிக்கு இரண்டரை கப் என்ற அளவில் தண்ணீர் விட்டு சிறிது நேரம் கொதிக்கவிடவும்.

• இதில் தேங்காய் துருவல், அரிசி ரவை, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கிளறி, ஆறியதும் சின்ன உருண்டைகளாக செய்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும். 

• இப்போது சுவையான சத்தான வெஜிடபிள் உருண்டை ரெடி.


மேலும் சமையல் குறிப்புக்களை பெற : பாய் கடை சமையல் LIKE THIS PAGE

Post a Comment

0 Comments