Subscribe Us

header ads

குழந்தைகளுக்கு கொலைவெறிப் பெயர்களையே அதிகமாக வைக்கும் அமெரிக்கர்கள்!



குழந்தைகளுக்கு பெற்றோர் அவர்களுக்கு பிடித்த வகையில் வித்தியாசமான பெயர் வைக்க நினைப்பது ஓரளவு சரிதான். ஏனெனில், தமது பெயர் அவ்வளது தனித்தன்மையாக இல்லை என்னும் பெருங்கவலையுடனேயே அவர்கள் வாழ்ந்து வந்திருக்கலாம்.

நம் ஊரிலும், பெற்றோர்கள் பலர் அவர்களது ஆசைக்கேற்ப நடிகர், நடிகைகளின் பெயரோ, அவர்கள் நடித்திருந்த மனதை பாதித்த கதாபாத்திரத்தின் பெயரையோ அவர்களது குழந்தைகளுக்கு பெயராக சூட்டுவர். இது தற்போது பெயர்களிலும் மருவி சண்டையும், வம்பும், துப்பாக்கியும் பெருகிவருகிறது.

துப்பாக்கிக் கலாச்சாரத்தை அடுத்த கட்டத்துக்கு பெருக்கும் வகையில், சிறுவர்கள் விளையாடும் வீடியோ கேம் வரை துப்பாக்கிகள் மற்றும் கொலைகள் கண்டமேனிக்கு அதிகரிப்பதனாலோ அல்லது அவ்வப்போது பல்வேறு போராட்டங்களின்போது பொருட்களை எரித்து நாசப்படுத்துவதாலோ என்னவோ, அமெரிக்கர்கள் தமது குழந்தைகளுக்கு துப்பாக்கி, மற்றும் சண்டைகளைச் சார்ந்த பெயர்களையே பெரிதும் வைத்து வருகின்றனர் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் குழந்தைகளின் பெயரை தெரிவு செய்ய உதவும் இணையதளம் ஒன்று இதுபற்றிய ஒரு ஆய்வை வெளியிட்டது. அதில், கடந்த ஆண்டில் மட்டும் கன்னர்(ஸ்காண்டினேவிய மொழியில் தைரியமான வீரர்) என்ற பெயரை சுமார் 750 குழந்தைகளுக்கு வைத்துள்ளனர். கேனன்(பீரங்கி) என்ற பெயரை வைத்து அதிகமான பெற்றோர் தமது பிள்ளைகளை அழைக்க விரும்புகின்றனர் என்றும் வெளியிட்டிருந்தது.

அதுமட்டுமின்றி, துப்பாக்கி தொடர்பான ட்ரிகர், ஷூட்டர், காலிபர், மேக்னம் மற்றும் பிஸ்டல் என்ற பெயர்களும் அங்கே பெருகி வருகின்றன. தவிர துப்பாக்கி தயாரிப்பாளர்களை பெருமைப்படுத்தும் அவர்களின் பெயரான பேரட், ரெமிங்டன், கிம்பர், ரூகர், வீசன், ப்ரவுனிங், பெனெல்லி மற்றும் பெரெட்டா போன்றவையும் முதன்மை பெற்றுள்ளன.

போர்கள் புரியும் வீரமான, கடவுள்களின் பெயரையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. கிரேக்க கடவுள் ஏரிஸ் தொடங்கி சில இந்துக் கடவுள்களின் பெயர்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. சரித்திரம் மற்றும் சித்திரம் போற்றும் மாவீரர்களின் பெயர்களும் இதில் அடக்கம்.

அமெரிக்காவில் ஐந்து ஆண் குழந்தைகளுக்கு கடந்த ஆண்டு டேஞ்சர்(அபாயம்) என்றும், ஒன்பது பேருக்கு கேயாஸ்(குழப்பம்) என்றும் பெயரிட்டுள்ளனர். மேலும் ஏரோ(கணை), பவ்(வில்), எனவும், பெயரிட்டுள்ள இந்த கோபக்கார பெற்றோரின் பிடித்த பெயராக சுமார் இருபது ஆண்டுகளாக இருப்பது ஹண்ட்டர்(வேட்டைக்காரன்) என்ற பெயர்தான்.

கேட்கவே அதிச்சியளிக்கும் இந்தப் பெயர்கள் பின்னாளில் இந்த குழந்தைகளுக்கு ஏற்படுத்த இருக்கும் பாதிப்பை எண்ணிக்கூட பார்க்க முடியவில்லை. உங்களுக்கு பிடித்த பெயர் என்பது சரி, அதற்காக இவ்வளவு ஆபத்தை பெயரிலேயே வைக்க வேண்டுமா? என சற்று சிந்தித்தால் பரவாயில்லை!

Post a Comment

0 Comments