Subscribe Us

header ads

மதுமொழிகள் 10


மதுமொழி -1

குடிப்பழக்கம் 
Beer இல் தொடங்கும் 
Tear இல் முடியும்

மதுமொழி- 2

நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பது, தந்தையும் மகனும் ஒன்றாகக் குடிப்பது, மகள் அப்பாவுக்கு பீர் வாங்கித் தருவது இவை எல்லாம் மதுவுக்கு சினிமா செய்த சேவை.

மதுமொழி -3

சந்தோஷமாக இருப்பவனும். தன்னை மறந்த நிலையை விரும்புகிறான். துக்கத்தில் இருப்பவனும் தன்னை மறந்த நிலையை விரும்புகிறான். இந்த பலவீனமே மதுவின் காலடியில் மனிதனை விழ வைக்கிறது

மதுமொழி- 4

மகிழ்ச்சிக்காக குடிப்பவனுக்கு தெரியாது-அது 
மகிழ்ச்சியையே குடிக்கப் போகிறது என்று

மதுமொழி -5 

உடுக்கை இழந்தாலும் ஆங்கே உதவாது 
குடிக்கப் பழகியவன் கை

மதுமொழி- 6

கொஞ்சம் கொஞ்சமாக குடிப்பதை விட்டுவிட முடிவு  செய்பவன். கடைசியில் விட்டு விடுகிறான் தன் முடிவை.

மதுமொழி- 7

ஆபத்தானது மதவாதம்-அதைவிட 
ஆபத்தானது மதுவாதம்

மதுமொழி -8

மதுவுக்கு வினோத குணம் உண்டு 
குடிப்பவனையும் தள்ளாட வைக்கிறது
குடும்பத்தையும் தள்ளாட வைக்கிறது

மதுமொழி- 9

அளவோடு குடிப்பவன் அளவின்றிக் குடிப்பவனை விட உயர்ந்தவன் அல்ல

மதுமொழி- 10

குடிப்பழக்கம் சில நட்புகளால் தூண்டப்பட்டு. பல நடப்புகளால் தொடரப்பட்டு. இழப்புகளை இலவசமாய் தருகிறது

குறிப்பு: மேற்சொன்ன அனைத்தும் என் சொந்த 'சரக்கே'!

- டி.என்.முரளிதரன்

Post a Comment

0 Comments