கண்கவர் உள்ளக வடிவமைப்புகள் மற்றும் அலங்காரப் பொருட்களை விநியோகிப்பதில் முன்னணியில் திகழும் Koala பிரைவட் லிமிடட், அண்மையில் தனது முதலாவது விற்பனைக் கிளையை கண்டியில் அங்குரார்ப்பணம் செய்திருந்தது.
இலங்கையின் முன்னணி பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனமான சியோகாவின் துணை நிறுவனமாக Koala பிரைவட் லிமிடட் இயங்கி வருகிறது.
நவீன போக்குகளுக்கமைய இடவசதியை பயன்படுத்திக் கொள்ளல், வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கேற்ப கண்கவர் வகையில் மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய தீர்வுகளை உருவாக்கல், நடைமுறைச் சாத்தியமான தீர்வுகள் மற்றும் தரம் ஆகியன தொடர்பில் ஆழமான புரிந்துணர்வைக் கொண்டுள்ள நிறுவனம் எனும் வகையில், நீண்ட காலமாக கம்பனியுடன் இணைந்துள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்கும் வகையிலும், மலையகத்தில் அதிகரித்துச் செல்லும் உள்ளக அலங்காரப் பொருட்களுக்கான கேள்வியை நிவர்த்தி செய்யும் வகையிலும் இந்தக் கிளை அமைந்துள்ளது.
Koala பிரைவட் லிமிடெட் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஹர்ஷித் தர்மதாச மற்றும் டெவொன் ஹோட்டல் குரூப் தலைவர் காமினி வீரரத்ன ஆகியோரால் இந்த காட்சியறை திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தர்மதாச உரையாற்றும் போது,
“Koala வின் புதிய கண்டி காட்சியறை என்பது, கம்பனி வளர்ச்சி தொடர்பில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளது. நவீன வாழ்க்கை முறைக்கு பொருத்தமான பரிபூரண தீர்வுகளை சர்வதேசத் தரங்களுக்கமைய வழங்கும் வகையில் அமைந்துள்ளது” என்றார்.
இந்த காட்சியறை திறப்பு நிகழ்வின் போது, Koala வின் புதிய வதிவிட, வியாபார, உள்ளக அலங்காரங்கள் மற்றும் பொருட்கள் போன்றனவும் உணவு சேவைகள் மற்றும் விருந்தோம்பல் தயாரிப்புகளும் விஜயம் செய்திருந்தவர்கள் மத்தியில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.
புகழ்பெற்ற பிரித்தானிய உள்ளக அலங்கார வடிவமைப்பாளரும் Sofa மேலுறை வடிவமைப்பு நிபுணர், தற்போது Koala வின் அலங்கார மற்றும் உற்பத்தி ஆலோசகராக பணியாற்றும் அதிகாரி இந்ந புதிய தளபாட அலங்காரங்கள் அறிமுகத்தை மேற்கொண்டிருந்ததுடன், Koala பொருட்கள் மற்றும் அவற்றின் கருத்தமைவு பற்றிய விளக்கங்களையும் வழங்கியிருந்தார்.
புதிய நான்கு மாடிகளில் அமைந்த Koala கண்டி காட்சியறையில் KOALA 18/10 Stainless Flatware, ஸ்பெயின் நாட்டை தளமாகக் கொண்ட Vicrilla Glassware, Oneida மற்றும் Sant Andrea Flatware மற்றும் Buffet ware போன்றன காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் பங்கேற்றவர்கள், வியாபார நிலையங்களுக்கு பொருத்தமான உள்ளக அலங்காரங்களுக்குரிய Koala வின் மேசைகள், அலுவலக கதிரைகள், கார்பெட்கள், சீலிங் மற்றும் ப்லைன்ட்கள் போன்றவற்றை பார்வையிட்டிருந்தனர்.
தனது கண்டி காட்சியறை அங்குரார்ப்பணத்துடன் பிரத்தியேக sofa க்களையும் Koala அறிமுகம் செய்திருந்தது. கவனமாக தெரிவு செய்யப்பட்ட இந்த பொருட்கள், அறையின் தோற்றத்தை எடுப்பாக காண்பிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளன.
வேலைப்பளு நிறைந்த வாழ்க்கை முறைக்காக வடிவமைக்கப்பட்டுள்ள Sofa No.1 என்பது நவீன வாழ்க்கை முறைக்கும் சிறிய இடவசதிகளுக்கும் ஏற்ற வகையில் அமைந்துள்ளது.
Villa Sofa மூலமாக எளிமையான தோற்றம் வழங்கப்படுவதுடன், லண்டன் Sofa மூலமாக ஒப்பற்ற தோற்றத்தையும் அனுபவத்தையும், விருந்தினர்களை வரவேற்கும் வகையிலும் அமைந்திருக்கும்.
நவீன உள்ளக வாழ்க்கை முறையை நாடுவோர், Koala வின் கிறீப் பாத் பகுதியில் அமைந்துள்ள காட்சியறையின் மீளறிமுகத்தை இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் பார்வையிட முடியும். கொழும்பு மற்றும் கண்டியில் அமைந்துள்ள கிளைகள் மூலமாக, மாற்றமடைந்துவரும் வாழ்க்கை முறைகளுக்கு பொருத்தமான கருத்தமைவுகள், பொருட்கள் மற்றும் தீர்வுகள் வழங்கப்படுகின்றன.
தர்மதாச தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“இந்த காட்சியறை மூலமாக அலங்காரம் பற்றிய எமது அணுகல், தரம் மற்றும் தங்கியிருக்கக்கூடிய பொருட்கள் போன்றவற்றை வழங்குகிறது. எமது அலங்காரங்கள் நவீன வகையிலும், தூய்மையானவையாகவும், சௌகர்யமானதாகவும், இளமையானதாகவும் அமைந்துள்ளன. எளிமையில் காணப்படும்
பிரத்தியேகத்தன்மையை நாம் நேசிப்பதுடன், எமது அலங்காரத்தின் எளிமைப்படுத்தல் சேர்க்கப்படுகிறது என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளோம்” என்றார்.
இந்த புதிய அங்குரார்ப்பணத்துடன், Koala காட்சியறைகள் “KOALA” என மென் சிவப்பு நிறத்தில் வர்த்தக நாமம் பொறிக்கப்பட்டிருக்கும்.
கண்டி கிளை இல. 465A, வில்லியம் கோபல்லாவ வீதி, கண்டி எனும் முகவரியில் அமைந்துள்ளதுடன், தொலைபேசி இலக்கம் 081 222 9868 அல்லது 0777 436 9601.

0 Comments