Subscribe Us

header ads

மதிப்பிற்குரிய PPAF சகோதரர்களுக்கு ...


நீங்கள் அனைவரும் இரண்டு வருட காலமாய் இந்த அமைப்பை உருவாக்கி எந்தளவுக்கு சமூகத்திற்காய் பாடுபடுகிறீர்கள் என்பதை நான் அறிந்து கொண்டேன்...
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மகிந்தவிற்கு எதிராய் செயல்படுகிறீர்கள் என்ற காரணத்தால் அடிப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , அங்கிருந்தே சிறைக்கும் அனுப்பபட்டீர்கள் ...
அப்பொழுது உங்களை படித்தவர்கள் என்றும், செயல் வீரர்கள் என்றும் புகழ்ந்தவர்கள் இன்று தீயவர்கள் என்றும் குழப்பவாதிகள் என்றும் இகழ்வதை காணும் போது இப்படி ஒரு சமூகத்திற்கா நீங்கள் தொண்டு செய்ய ஆயத்தம் ஆனீர்கள் என்று ஒரு பக்கம் தோன்றினாலும் இன்னொரு பக்கம் இது உலகின் பலருக்கும் நடந்த ஒன்று என்று ஆறுதல் அடைகிறேன்...
நடந்து முடிந்த பொது தேர்தலில் நீங்கள் களம் இறங்கியது தவறு என்றும் , உங்களால் தான் உறுப்பினர் இல்லாமல் ஆகியது என்றும் குற்றம் சாட்டுவோர் கடைசி கட்டத்தை மட்டும் வைத்தே உங்களை விமர்சிக்கிறார்களே ஒழிய ஆரம்பத்தில் இதை உருவாக்க யாரெல்லாம் கை உயர்த்தினார்கள் , ஏன் இடையில் கழுத்தறுத்து விட்டு ஓடினார்கள் என்பதை எல்லாம் சிந்தித்து பார்க்க தவறி விட்டனர்...
ஆனால், துரதிஷ்டம் என்னவெனில் கழுத்தறுப்பு செய்து விட்டு ஓடிய இவர்களின் பேச்சுக்கள் தான் சமூகத்தில் ஏற்று கொள்ளப்பட்டது.
படித்த ஆசான்கள்,சட்டத்தரணிகள்,வைத்தியர்கள்,பொறியியலாளர்கள் ,இன்னும் பல கல்விமான்களான உங்களது புள்ளி விபரங்களையும், கடந்த கால தரவுகளையும் கண்டு கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ இல்லை...
பதவி,பணம்,வியாபார விருத்தி ,சுயநலம் இப்படி பல காரணங்களுக்காய் உங்களை விட்டும் தூரமாகி பிற அரசியல்வாதிகளின் முகவர்களாய் செயல்ப்பட்ட 'வைத்தியர்களின்,தொழில் அதிபர்களின், அரசியல் வாதிகளின்,கைக்கூலிகளின் சொற்களையும் ,பொய்களையும் ஏற்றுக்கொண்ட 'மகா ஜனங்கள்'...
பணம் படைதவர்களினதும்,உயர் ரக வாகனங்களில் உலா வருபவர்களதும் சொற்களை கேட்ட மக்களுக்கு மிதி வண்டிகளிலும் ,சாதாரண தொழில் செய்கின்ற நடுத்தர வர்க்கமான உங்களதும் சொற்களை ஏற்று கொள்ள முடியாது போனது.

இந்த பொய்யர்கள் இந்த தேர்தலில் மஹிந்த ஒரு செல்லா காசு என்று தெரிந்தும் உங்களுக்கும் மகிந்தவிற்கும் தொடர்பு உள்ளது என்று கூறினர் ... இதற்கு பதிலாக மஹிந்த வெல்ல மாட்டார் ,ஐக்கிய தேசிய கட்சியே வெல்லும் அதன் பின்பு தேசிய அரசொன்று உருவாகும் என்று நீங்கள் பதில் கூறிய போதும் அதனை ஏற்க மக்கள் தயராக இருக்கவில்லை... எவ்வளவு வாக்குகள் கிடைத்தாலும் மூன்று முஸ்லிம்களுக்கும் வாக்குகள் ஒன்றாக கிடைக்காது ,அவைகள் சிதறும் என்று சொன்ன போது உங்கள் பேச்சுக்கள் வெற்று பேச்சுக்களாய் பார்க்கப்பட்டது..ஆனால் இது இன்று நடந்துள்ளது...
கவனமாய் காய்களை நகர்த்துங்கள் ,உங்கள் இலக்குகளை வரையறை செய்யுங்கள்...

ஆனாலும் ,இதை எல்லாம் உணராத சிலர் இன்று உங்களை குறை சொல்வதிலும், எள்ளி நகையாடுவதிலும் காலம் கழிக்கின்றனர் .. ஆனால் இவர்களுக்கு பதில் சொல்வதை விட்டு விட்டு உங்கள் பயணத்தை தொடருங்கள்... அவர்களிடம் பணங்களும் ,சொத்துக்களும் நிறைந்து இருக்கலாம் ,உங்களிடம் இவைகள் இல்லாது இருக்கலாம் ... ஆனால் அவர்களிடம் இல்லாத ஒன்றை இறைவன் உங்களுக்கு தந்திருக்கிறான் . அதனால் தான் உங்களுக்கு எதிராய் இவ்வளவு நாட்களும் பேசியவர்கள் இன்று உங்களை இணைத்து கொள்ள ஆவல் கொள்கின்றனர் .. இதன் முதல் கட்டமாய் உங்களோடு இணைந்து விட்டதாய் சமூக ஊடகங்களில் கதைகளை பரப்பி உள்ளனர்...

26 வருடம் நோயுற்ற ஒருவருக்கு ஆங்கில வைத்தியத்தை விடவும் , ஆயுர்வேத வைத்தியமே சிறந்ததும் பக்க விளைவு அற்றதும் ஆகும்..ஆனாலும் இது உடனடியாய் பலன் தரப்போவதில்லை ... இப்படி தான் உங்கள் செயலகளையும் நான் பார்க்கிறேன் ,உடனடி தீர்வுகள் நமக்கு வேண்டாம் நல்ல தீர்வுகளே வேண்டும்...அதை நோக்கி உங்கள் செயல்பாடுகள் அமையட்டும்... உங்களுக்கு என்றும் நமது ஆதரவு உண்டு...இன்று உங்களை இகழும் வாய்கள் ,மீண்டும் புகழும் காலம் வரும் இன்ஷா அல்லாஹ்... அது வரை பொறுமையாய் தொடருவோம் நமது பணிகளை... ''உண்மைகள் என்றுமே ஏற்று கொள்ளப்டுவதில்லை , மாறாக நிரூபிக்கப்படுகின்றன '' இப்படிக்கு எம்.எம்.அம்மார் .
கற்பிட்டி
23.08.2015

Post a Comment

0 Comments